நெல்லிக்கனி.. கல்லீரலில் கழிவு.. இந்த அறிகுறி இருந்தால் ஜாக்ரதை.. கல்லீரலை காக்கும் சூப்பர் டிப்ஸ்
உடலிலுள்ள கழிவுகள், நச்சுக்கள், போன்றவற்றை வெளியேற்றி, மொத்த உறுப்புகளின் சீரான செயல்பாட்டை நிர்வகிக்க உதவுவதே கல்லீரல்கள்தான்..
புரதம்: அதுமட்டுமல்ல, பல புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் பணியை செய்வதும் இந்த கல்லீரல் தான்.. அதைவிட முக்கியமாக ரத்தத்தை சுத்தப்படுத்துவதும் இந்த கல்லீரல்தான்.. புரதத்தை உருவாக்குவதும் இந்த கல்லீரல்தான்.. இவ்வளவு முக்கியம் வாய்ந்த கல்லீரலை, நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கிய கடமையாக உள்ளது… காரணம், கல்லீரலை பொறுத்தவரை, எந்த பிரச்சனையாக இருந்தாலும், 70 சதவீதம் பாதிக்கப்பட்ட பிறகே வெளியே தெரியவரும்.
முக்கியமாக, கல்லீரலில் கழிவுகள் அதிகமாகிவிடாமல் பார்த்து கொண்டாலே பெருமளவு நோய்கள் தவிர்க்கப்பட்டுவிடும்.. கல்லீரலில் கழிவுகள் அதிகமானால் குடல் செயல்பாடு வெகுவாக பாதிக்கப்படும். செரிமான கோளாறுகள் அதிகமாகவே ஏற்படும்.. இதனால், மலச்சிக்கல், வாயுத்தொல்லை, அஜீரணம் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்..
மந்தத்தன்மை: அதேபோல, கல்லீரலில் கழிவுகள் தேங்கி கிடந்தால், உடலில் மந்த தன்மை ஒட்டிக்கொண்டு விடும்.. சோர்வு அதிகமாகும்.. சுறுசுறுப்பாக இயங்க முடியாது..
சிலருக்கு வாந்தி, மயக்கம், குமட்டல் வரலாம்.. சிலருக்கு வயிற்று வலி, மலத்தில் ரத்தம் வெளிப்படுதல் போன்றவையும் ஏற்படலாம்.. சிலருக்கு முழங்கால்களுக்கு கீழ்ப்பகுதி தொடங்கி பாதம் வரை வீக்கங்கள் வரலாம், அல்லது பாதங்களில், கணுக்கால்களில் வீக்கங்கள் வரலாம். இதெல்லாம்கூட கல்லீரலில் நச்சுக்கள் அதிகமாக இருப்பதன் அறிகுறிகள்தான். இதுபோன்ற எந்த அறிகுறி தென்பட்டாலும், உடனடியாக மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
கல்லீரலுக்கு எதிரி: எனவேதான், உணவு உள்பட பல்வேறு விஷயங்களில் கவனமாக இருந்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியிருக்கிறது. கல்லீரலுக்கு நேரடி எதிரி என்று சொல்லக்கூடிய ஆல்கஹால், சிவப்பு இறைச்சி, உப்பு, வெள்ளை மாவு பொருட்கள், எண்ணெய் பொரித்த உணவுகள், அதிக தித்திப்பு உணவுகள் போன்றவற்றை சற்று தள்ளி வைத்தாலே கல்லீரல் காப்பாற்றப்பட்டுவிடும்.
அதற்கு பதிலாக, திராட்சை, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட், பூண்டு, வெங்காயம், மஞ்சள் தூள், மீன், முட்டை, முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர், வைட்டமின் C நிறைந்த நெல்லிக்காய் உள்ளிட்ட பழங்களை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
கரும்பு சாறு: இதில் கரும்புச்சாற்றையும் சேர்த்து கொள்ளலாம். கல்லீரல், சிறுநீரகம், உள்ளிட்ட உள்ளுறுப்புகளின் செயல்பாட்டுக்கு இந்த கரும்பு சாறு உதவுகிறது.. கல்லீரலை வலிமையாக்குகிறது… கல்லீரலில் தேங்கி கிடக்கும் நச்சுக்களை வெளியேற்ற தூண்டுகிறது.. மஞ்சள் காமாலை நோயாளிகளுக்கு இந்த கறும்பு சாறு நல்லது..