ஒல்லி ஒல்லியா இருக்கீங்களா? அப்ப உருளைக்கிழங்கை எடுங்க.. உருளைக்கிழங்கால் ஹார்ட் அட்டாக் வருமா?
உருளைக்கிழங்கில் வைட்டமின் C, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம் போன்றவை அடங்கியிருக்கின்றன.. பெரும்பாலும் புண்களை ஆற்றக்கூடிய தன்மை இந்த உருளைக்கிழங்கிற்கு உண்டு. வயிற்றுப்புண், வாய்ப்புண்கள், வயிறு தொடர்பான கோளாறுகளை இந்த உருளை தீர்க்கிறது.
பொட்டாசியம்: உருளைக்கிழங்கில் ஸ்பெஷலாட்டியே அதிலுள்ள பொட்டாசியம்தான்.. இதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது மிகவும் நல்லது.. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதே இந்த பொட்டாசியம்தான்..
மேலும், இந்த கிழங்கிலுள்ள மாவுச்சத்து, அடிவயிறு, இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதை தடுக்கின்றன.. இதனால், அசுத்தநீர் இரைப்பை குழாய்களில் தேங்குவதும் தடுக்கப்பட்டுவிடுகிறது.. ஆனால், நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை தவிர்த்துவிடவேண்டும்.
சரும நலன்: உருளைக்கிழங்கிலிருக்கும் வைட்டமின் C, சருமத்துக்கு மிகவும் நன்மை தரக்கூடியது.. பளபளப்பை தரக்கூடியது.. முகசுருக்கங்களை போக்கக்கூடியது.. அதனால்தான், உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்..
அதனால்தான், பச்சை உருளைக்கிழங்கை விழுதுபோல அரைத்து, தேனுடன் கலந்து சருமத்தில் தடவுவார்கள். இதனால், சருமம் ஆரோக்கியமாவதுடன், பருக்கள், புள்ளிகள், கருமை நிற புள்ளிகள் நீங்கிவிடும். எப்போதுமே தோலுடன் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால், நார்ச்சத்துக்கள் உடலில் சேர்கிறது..
மாரடைப்பு: உருளைக்கிழங்கு நிறைய சாப்பிட்டால், உடல் எடை அதிகரித்து, மாரடைப்பு வந்துவிடும் என்பார்கள்… ஆனால், இது உண்மை கிடையாது. உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகம் சேராமல் இது தடுக்கிறது.. கெட்ட கொழுப்புகள் உடலில் குறைந்தாலே, மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கப்பட்டுவிடும்.
அந்தவகையில், இதயநோய், பக்கவாதம் போன்ற அபாய நோய்களை வராமல் தவிர்க்க இந்த உருளை உதவுகிறது. ஆனால், குறைந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.
அதேசமயம், பச்சை கலரில் காணப்படும் உருளைக்கிழங்கு, முளைவிட்ட உருளைக்கிழங்கு, கசப்புத்தன்மை வாய்ந்த உருளைக்கிழங்கு போன்றவற்றை தவிர்த்துவிட வேண்டும். நீண்ட நாட்கள் சமைக்காமல் வைத்திருக்கும் உருளையில் முளை விட்டுவிடும். இதுபோன்ற முளைவிட்ட கிழங்கையும் தவிர்த்துவிட வேண்டும்.
வயிற்றுப்போக்கு: காரணம், முளைவிட்ட கிழங்குகளில் அதிகமான க்ளைக்கோஆல்கலாய்டு உள்ளதால், விஷத்தன்மை வாய்ந்தது என்றும் சொல்கிறார்கள்.. இதனை சாப்பிடும்போது, வாந்தி, வயிற்றுப்போக்கு, போன்ற வயிறு உபாதைகள் வரலாம்.. மேலும், இதை நிறைய சாப்பிட்டால், ரத்த அழுத்தம், தலைவலி, உள்ளிட்ட பிரச்சனைகளும் வரலாம்.. அதுவும், கர்ப்பிணிகள் இதை சாப்பிட்டால், குழந்தைக்கும் பாதிப்பை தந்துவிடும்.
சில உருளைக்கிழங்கு சமைத்தாலும் கசப்புத்தன்மையுடன் இருக்கும்.. இதையும் தவிர்த்துவிட வேண்டும்.. உருளைக்கிழங்கில் நிறைய சோலனைன் என்ற சேர்மங்கள் உள்ளதுதான், இந்த கசப்புத்தன்மைக்கு காரணம்..
வெங்காயம்: அதேபோல நிறைய உருளைக்கிழங்கை வாங்கி வைப்பதால்தான், அவை நாளடைவில் பச்சை நிறமாகிவிடுகிறது.. இந்த பச்சை நிற கிழங்கையும் தவிர்க்க வேண்டும்.. எனவே, தேவைக்கு வாங்கி வைத்துகொண்டு, குளிச்சியான, இருட்டான இடத்தில் சேமித்து வைத்தால் போதும்.. அதேபோல, உருளைக்கிழங்குடன் சிலர் வெங்காயத்தையும் வைத்துவிடுவார்கள்.. இதையும் தவிர்க்க வேண்டும்.