மலேரியாவை விரட்டும்! மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்! கோரைக்கிழங்கின் அற்புதம்! எப்படி சாப்பிடுவது?
சித்தர்கள் நமக்கு எண்ணற்ற மூலிகைகளை விட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில் மிக முக்கியமானது கோரைக் கிழங்கு. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த கிழங்கு சேப்பழங்கிழங்கு போல் இருக்கும். அதன் நுனியில் வேர் இருக்கும்.
இதன் மருத்துவ பயன்களை எடுத்துக் கொண்டால் கோரை கிழங்கு எல்லாவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக மலேரியா காய்ச்சலையே குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மாதவிடாயை தூண்டும்.
அத்துடன் குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க இந்த கோரை கிழங்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது. மார்பகத்தில் கோரைக் கிழங்கை அரைத்து தேய்க்க வேண்டும். அது போல் பூஞ்சை காளான்கள், நுண்ணுயிர்களை போக்கும் ஆற்றல் உள்ளது. சுருக்கத்தை போக்கி தோலுக்கு மென்மைத்தன்மை கொடுக்கும். சிறுநீரை பெருக்கும். அது போல் வெள்ளைப்படுதலுக்கு அருமருந்தாகும்.
இடுப்பு வலி, அடி வயிற்று வலி, கருப்பை புண்களை போக்கும். உடலில் மருக்கள் இருந்தால் கோரைக் கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, சந்தன பொடியுடன் பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூச வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர முகச்சுருக்கம் சரியாகும். முகப்பரு வராது. அது போல் உடல் வலியை போக்கும்.
உடலுக்கு பலத்தை கொடுக்கும். குழந்தைகளுக்கு செரிமான சக்தியை ஏற்படுத்தும். ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சரி செய்யும். உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும். மூட்டு வலி, தசை வலி நீங்கும். கோரைக்கிழங்கை காய்ச்சாத பாலுடன் சேர்த்து பூசி குளித்தால் வியர்வை நாற்றம் அகலும். குடலில் இருக்கும் புழுக்களை போக்கும்.
சொரி, சிரங்கை நீக்கும். அடிக்கடி சளி பிடித்தாலும் கோரைக் கிழங்கு அதை குணமாக்கும். கோரை கிழங்கு பொடியை பாலுடன் சேர்த்து குடித்தால் ஆஸ்துமா விலகும். மஞ்சள் காமாலையை போக்கும் அருமருந்து. இது புல் வகையை சேர்ந்தது. கசப்பு தன்மையுடன் இருக்கும். சரும நோய்களை போக்கும் தன்மை உள்ளது. முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாத்து என்றும் இளமையுடன் இருக்க வைக்கும்.