முருங்கையிலை மகத்துவம்.. முருங்கை பூ பொடியே போதும்.. நோயை நாலடி தள்ளி நிறுத்தும்.. வாவ் முருங்கை பூ
முருங்கையிலையை சமையலில் சேர்த்து கொள்வது போலவே, முருங்கைப்பூக்களையும் சேர்த்து கொண்டால், கூடுதல் பலன்கள் கிடைக்கும். இதில், முருங்கைப்பூ பொடி தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
கண்களில் உள்ள எல்லா கோளாறுகளையும் சரிசெய்யக்கூடியது இந்த பூக்கள்.. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து, பிறகு அந்த பாலை வடிகட்டி குடித்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும்..
நீரிழிவு நோயாளிகள்: நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கைப்பூக்கள் மிகவும் நல்லது.. காரணம், இந்த பூக்கள் உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. மாதவிடாய் நேரத்தில் அளவுக்கு அதிகமான உதிரப்போக்கை கட்டுப்படுத்தக்கூடியது.. குழந்தைகளின் நினைவாற்றலுக்கு, முருங்கைப்பூ உதவுகிறது. முருங்கைப்பூவில் அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து, பனங்கல்கண்டு சேர்த்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். ஆனால், இந்த பூக்களை காயவைத்து பொடி செய்து சாப்பிட்டால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
வாதம், கபம்: இந்த பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, பித்தம், வாதம், கபம் போன்ற பிரச்சனைகள் தீர்கின்றன.. ரத்த சோகையும் நீங்கி, உடலில் ரத்த விருத்தி ஏற்படுகிறது.. சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும் இந்த பொடி துணை செய்கிறது..
அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்துவிடும். இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள், முருங்கை பூ பொடியில் கஷாயம் போல செய்து வாரம் 2 முறை குடித்து வரலாம். இதனால், மன அழுத்தம் நீங்குவதுடன், பயம், கோபம், அசதி, தலைவலி குணமாகி நன்றாக தூக்கம் வரும்.. மனம் அமைதி பெறும். இந்த பொடியை 5 கிராம் வீதம் தேன் கலந்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால், கண்ணில் ஏற்படும் வெண்படலம் மாறும்..
முருங்கை பூக்கள்: முருங்கை பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும். இந்த பொடியை, கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.
முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாகி, கர்ப்பப்பை பலமடையும்..
ஆலோசனை: முருங்கைப் பூ பொடியை பச்சை பாலுடன் 60 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தாலும், குழந்தையின்மை பிரச்சனைகள் நீங்கும்.. ஆனால், உள்ளுக்குள் இப்படி மருந்தாக உட்கொள்ள நேர்ந்தால், கட்டாயம் டாக்டர்களின் சித்தா அல்லது ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசனையை பெற வேண்டும்.