வேப்பங்குச்சி.. உங்க நாக்கு இந்த கலரில் மட்டும் இருக்கக்கூடாது? உடனே கவனியுங்க..அசால்ட்டா விடாதீங்க
ஒருவரின் நாக்கின் நிறத்தை வைத்தே, அவருக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து அறிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு, ஒருவரது உடல் ஆரோக்கியத்துக்கும், நாக்கின் நிறத்துக்கும் தொடர்பு உள்ளது.
பூஞ்சை தொற்றுக்கள், சிகரெட் பிடிப்பவர்கள், அல்லது புண்கள் காரணமாக சிலருக்கு நாக்கு கருப்பு நிறமாக மாறலாம்.. அதேசமயம், புற்றுநோய் போன்ற கொடூர நோய்களை குறிப்பதாக அர்த்தமாம்..
சாம்பல் நிறம்: அதேபோல, சாம்பல் நிறத்தில் இருந்தால் செரிமானம் மற்றும் மூலநோய் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டுமாம்.. காப்பி நிறத்தில் நாக்கு மாறினால், நுரையீரல் பாதிப்பை குறிக்குமாம். ஆங்காங்கே வெள்ளை புள்ளிகள் நாக்கில் தோன்றினால், அலர்ஜியை குறிக்கிறதாம்.
அதேபோல, நாக்கின் நிறம் புளூ கலராக இருந்தால், இதயம் தொடர்பான நோய் பாதிப்பை குறிக்கிறதாம். அதாவது, இதயம் சரியாக பம்ப் செய்யவில்லை என்றாலோ, அல்லது ரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்றாலோ, நாக்கு நீலநிறமாக காணப்படுமாம். இளஞ்சிவப்பு நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாறத்தொடங்கினால், உடலில் போதுமான வைட்டமின் B12, ஃபோலிக் அமிலம் இல்லை என்று அர்த்தமாம்.. நாக்கின் மேற்பரப்பில், சிவப்பு நிற புள்ளிகள் ஏற்படுவது இந்த குறைபாட்டினால்தானாம்.
வெள்ளை கலர்: நாக்கின் நிறம் வெள்ளையாக இருந்தாலே, வாய் சுத்தமாக இல்லை என்று அர்த்தம்.. நாக்கின் நிறம் மஞ்சள் கலராக இருந்தால், உடலில் பல குறைபாடுகள் இருக்கிறது என்று அர்த்தமாம்.. அதாவது, ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் மஞ்சள் நிறம் படியலாம்.. அல்லது கல்லீரல் பிரச்சனையாகவும் இருக்கலாம். பித்தப்பை பிரச்சனையாகவும் இருக்கலாம்..
அல்லது வயிறு உபாதைகள் காரணமாகவும், நாக்கில் மஞ்சள் படியலாம்.. வெளீர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், உடலில் ஏதோ தீவிரமான பிரச்சனை உள்ளது என்றும் அர்த்தமாம்..
மஞ்சள் நிறம்: புகைப்பிடித்தல், புகையிலையை மெல்லுதல் இருந்தாலும், நாக்கில் மஞ்சள் கலர் படியலாம்.. மஞ்சள் காமாலை இருந்தாலும், கல்லீரல் தொடர்பான பிரச்சனை இருந்தாலும், நாக்கு மஞ்சள் நிறத்தில் மாறும்.. அதாவது, கண்களின் நிறத்தை காமாலை மாற்றுவதுபோல, நாக்கின் நிறத்தையும் மாற்றுமாம்.
அதைவிட முக்கியமாக, வாயை சரியாக சுத்தம் செய்யாவிட்டால், பாக்டீரியாக்கள் உருவாகி, மஞ்சள் நிறத்திற்கு காரணமான நிறமிகளை உற்பத்தி செய்துவிடும். மேலும், ரத்தத்தில் பில்ருமின் அளவு அதிகரித்து, கடைசியில் சிறுநீரக செயலிழப்பு வரை கொண்டுபோய் விடும். எனவே நாக்கு மஞ்சள் நிறத்தில் லேசாக மாற துவங்கினாலே டாக்டரை சந்திக்க வேண்டும்..
பிங்க் கலர்: இதையெல்லாம் தவிர்க்க, வாய் சுகாதாரம் கட்டாயம் பேணப்பட வேண்டும்.. வாரம் ஒருமுறையாவது, வேப்பங்குச்சியை பயன்படுத்தி பல் துலக்க வேண்டும். இதனால், வாயிலுள்ள நுண்கிருமிகள், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகுவது தடுக்கப்படும்..
அதிக சூடான மற்றும் குளிர்ச்சியான உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மொத்தத்தில், நாக்கு வெளிரிய பிங்க் நிறத்தில் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தமாம்.