த்ரிஷா இல்லனா சமந்தா.! கதாநாயகியை உடனே மாற்றிய பிரபல இயக்குனர்..
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் விஷ்ணுவர்தன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் இயக்கி ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்ற இயக்குனராக இருந்து வருகிறார்.
இவர் தமிழில் இயக்கிய குறும்பு, சர்வம், அறிந்தும் அறியாமலும், பட்டியல், ஆரம்பம், பில்லா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் மற்றும் பில்லா திரைப்படம் தமிழ் சினிமாவில் இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு முக்கிய இடத்தை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தமிழில் முக்கிய இயக்குனராக இருந்து வரும் விஷ்ணுவர்தன் ஹிந்தியில் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் சல்மான்கான் கதாநாயகனாக நடித்து கரன்ஜோகர் தயாரிப்பில் உருவாகவுள்ளது.
மேலும் இப்படத்தின் கதாநாயகியாக பல கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் த்ரிஷாவை கதாநாயகியாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பிசியான நடிகையாக இருந்து வருகிறார்.
இது போன்ற நிலையில் த்ரிஷாவால் இந்த படத்தில் நடிக்க முடியாத காரணத்தினால் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சமந்தாவே இப்படத்திற்கு சரியாக இருப்பார் என்றும் பட குழு எண்ணி வருவதாக திரைத்துறையில் பேச்சுவார்த்தை நிலவி வருகிறது.