தமிழகத்தில் நாளை(ஜன..6) பள்ளிகள் செயல்படும். அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!!
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறைக்கு பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டு உள்ள நிலையில் கூடுதல் விடுமுறை நாட்களை ஈடு செய்யும் பட்சத்தில் மட்டுமே சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி நாளை சனிக்கிழமை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.