இவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து?. மாநில அரசு அதிரடி நடவடிக்கை.!!!
இந்தியாவில் அரசு விதிகளின்படி வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், நான்கு சக்கர வாகனங்கள், வீடு உரிமையாளர்கள் ஆகியோருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட மாட்டாது.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் தகுதியற்ற பலரும் ரேஷன் கார்டை பெற்று பயனடைந்து வருவதாக புகார் எழுந்த நிலையில் அரசின் நிபந்தனைக்கு உட்படாத நபர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
இதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அரசு அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. அதன்படி மாவட்ட உணவு வழங்கல் ஊழியர்கள் மூலம் பயனாளிகளின் வீடுகளில் நேரடியாக பார்வையிட்ட ரேஷன் கார்டில் சரிபார்ப்பு பணி தொடங்கப்பட உள்ள நிலையில் இரண்டு அல்லது நான்கு நாட்களில் ரேஷன் கடை ரத்து செய்ய நடவடிக்கை தொடங்கும் என அரசு தெரிவித்துள்ளது.