நியூசிலாந்தின் 170 ஆண்டு வரலாற்றில்.. நாடாளுமன்றத்தையே அசரடித்த இளம் பெண் எம்பி.. வீடியோ
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மௌரி பழங்குடி பெண் எம்பி மைபி கிளாக், தங்களின் பாரம்பரிய வெற்றி முழகத்தை முழங்கிவிட்டு உரையாற்றினார்.
அதனை அங்கிருந்து எம்பிக்கள் மகிழ்ச்சியுடனும், ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டே இருந்தனர். அந்த முழக்கம் உலகம் முழுவதும் பெரிய அளவில் வைரலாகி, காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளளது.
நியூசிலாந்து உலகின் அற்புதமான நாடுகளில் ஒன்று. ஊழல்கள் இல்லாத, நாட்டையும், நாட்டு மக்களையும் வெகுவாக நேசிக்கும் அரசியல்வாதிகள் நிறைந்த நாடு. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று. ஆஸ்திரேலியாவை ஒட்டி உள்ள நியூசிலாந்தில் குடியேற பலர் விரும்புகிறார்கள். அந்த அளவிற்கு இயற்கை அங்கே எல்லாவற்றையும் அள்ளி வழங்கி உள்ளது.
சரி விஷயத்திற்கு வருவோம். நியூசிலாந்து நாட்டின் 170 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக கடந்த அக்டோபரில் 21 வயது இளம் பெண் எம்பி தேர்வு செய்யப்பட்டார். மைபி கிளார்க் என்ற அந்த பெண் எம்பி தான் நியூசிலாந்து நாட்டிலேயே 21 வயதில் எம்பியானவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் மௌரி பழங்குடி பெண் எம்பியான மைபி கிளார்க் நாடாளுமன்றத்தில் முழக்கமிட்ட வீடியோ காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நியூசிலாந்தை பொறுத்தவரை ஹக்கா நடனம், நியூசிலாந்து மௌரி பழங்குடியினரின் ஆதி பழக்கங்களில் ஒன்று, போர்,வெற்றி,ஒற்றுமை,இன குழுவின் பெருமை என எல்லாவற்றையும் சொல்ல பயன்படுத்தபடும் முறையாகும். அந்த பழங்குடியினரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வயது எம்பியான மைபி கிளாக் வெற்றி முழக்கமிட்டு, தனது உரையை பேசி, அந்த நாடாளுமன்றத்தையே அதிர வைத்துள்ளார்.
மைபி கிளாக் யார் என்று நெட்டிசன்கள் கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் தேடி வருகிறார்கள். மைபி கிளாக் எம்பி திடீர் அரசியல்வாதி அல்ல.. அரசியல் அவரது ரத்தத்திலேயே ஊறி உள்ளது. அவரது தாத்தா வயர்மு கட்டேனே நியூசிலாந்தின் மௌரி பகுதியின் முதல்வராக இருந்தார். அவரது அத்தை ஹனா தே ஹேமாரா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். ஹாமில்டனின் நடந்த அடிமைத்தனம் மற்றும் மாவோரி பழங்குடியினர் மீது நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராக போராடியவர்கள் ஆவார்.
மைபி-கிளார்க் ஹன்ட்லி என்ற பகுதியைச் சேர்ந்தவர். நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கும் ஹாமில்டனுக்கும் இடையே உள்ள ஒரு சிறிய நகரம் அகும்- அங்கு அவர் மவோரி சமூகத் தோட்டத்தை நடத்தி வருகிறார், இது உள்ளூர் குழந்தைகளுக்கு மரமடகா வரை தோட்டம் அல்லது மாவோரி மக்கள் விவசாயம் செய்ய கடை பிடிக்கும் சந்திர நாட்காட்டிக்கு ஏற்ப நடவு செய்வது பற்றி கற்பித்து வருகிறார்.
New Zealand natives’ speech in parliament pic.twitter.com/OkmYNm58Ke
— Enez Özen | Enezator (@Enezator) January 4, 2024
மைபி-கிளார்க் தன்னை ஒரு அரசியல்வாதியாக நினைக்கவில்லை.. மாறாக மவோரி மொழி, நிலம் மற்றும் பாரம்பரிய அறிவு ஆகியவற்றை பாதுகாக்கும் பாதுகாவலனாக நினைத்து செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி அடக்குமுறைகளை சந்தித்த இனமான மவோரிகளிடம் இருந்து வந்துள்ள இவர், மாவோரியின் குரல்களைக் கேட்க வேண்டிய நேரம் இது என்று உறுதியாக நம்புகிறார்.
மைபி-கிளார்க்கை இன்ஸ்டாகிராமில் 20,000 பின்தொடர்பவர்களும், டிக்டோக்கில் 18,500 பின்தொடர்பவர்களும் இருக்கிறார்கள். மைபி-கிளார்க் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கிறார். மண்ணும் மலையும் எங்கள் பரம்பரைக்கே சாமியாடா என்ற பாணியில் நியூசிலாந்தின் 21 வயது எம்பியான மைபி-கிளார்க் குரல் இப்போது சமூக ஊடகங்களில் ஓங்கி ஒலிக்கிறது.