Relationshipல் பிரச்னையின்போது நம்மிடம் வெளிப்படும் 4 பதில்கள் – உளவியல் நிபுணர்கள் கூறுவது என்ன?

கண்டிப்புகாட்டாத வீடுகளில் நாம் வளர்க்கப்படும்போது, அது நம் காதல் உறவுகளில் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

நம் அன்புக்குரியவருடன் நாம் இணையும்போது உறவுகளைப் புரிந்துகொள்வதும் ஆரோக்கியமான தகவல்தொடர்புக்கான இடத்தை உருவாக்குவதும் மிகவும் முக்கியம். இருப்பினும், குழந்தைப் பருவ அதிர்ச்சி உறவுகளில் வெளிப்படலாம்.

“காதல் உறவுகள், நட்புகள் மற்றும் குடும்ப இயக்கவியல் ஆகியவற்றில் மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை எவ்வாறு கையாள்வது, அன்பை வரவேற்பது எப்படி என்பது குறித்து ஒரு குறிப்பிடத்தக்க பகுதி குழந்தைப் பருவத்தில் நாம் கற்றுக்கொண்ட மற்றும் அனுபவித்தவற்றில் இருந்து செயல்முறைக்கு வருகிறது” என்று தெரபிஸ்ட் எம்மிலோ அன்டோனியெத் சீமேன் எழுதியுள்ளார்.

மேலும் இதுகுறித்து கூறிய தெரபிஸ்ட், “நாம் இளமையாக இருக்கும்போது சில சம்பவங்கள் அதிர்ச்சியை உண்டாக்குகின்றன. அதனால், மீண்டும் மீண்டும் அதிர்ச்சிகரமான மற்றும் மன அழுத்த அனுபவங்களை அனுபவிக்கிறோம்.

ஆனால், அதிர்ச்சி நிகழாதபோது அதன் தாக்கம் நம் வாழ்வில் தொடரலாம். இருப்பினும், உறவுகளைக் கையாள்வதில் நமது மூளையும் உடலும் நம்மை ஆபத்திலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கத் தொடர்ந்து வேலை செய்கின்றன” எனக் கூறுகிறார்.

ரிலேஷன்ஷிப்பில் தொடரும் நான்கு சிக்கலான போக்கு குறித்து தெரபிஸ்ட் எம்மிலோ அன்டோனியெத் சீமேன் எழுதியது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அடிதடியில் ஈடுபடுவது ஏன்?: ஒரு கடினமான சூழ்நிலையில் நாம் சிக்கிக் கொள்ளும்போது, அதை எதிர்த்துச் சண்டையிடுவதும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள அடிதடியில் இறங்குவதும் நமது எதிர்வினையாக இருக்கலாம். இது ரிலேஷன்ஷிப்பில் எப்போது நிகழ்கிறது என்றால், நம் பெற்றோரும் பராமரிப்பாளர்களும் சின்னச் சின்ன விஷயங்களுக்காக சண்டையிடுவதைப் பார்த்த ஒரு வீட்டில் வளரும்போது அதன் தாக்கம் நம்மைப் பாதிக்கிறது.

பிரச்னைகளில் அழுகை வருவது ஏன்?: இக்கட்டான சூழ்நிலைகளில் வளரும்போது, நம்மை யாரும் வழிநடத்த ஆள் இல்லாதபோதும் சிலர் நம் மீது சில அழுத்தங்களைத் திணிக்கும்போதும் அழுகை வருகிறது. அதுதவறு. சூழ்நிலைகளை எதிர்கொள்ள முயற்சி எடுங்கள்.

சிலர் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

ஒரு இக்கட்டான சூழலில் முற்றிலும் அமைதியாகி, நிலைமையையும் கடினமான உரையாடல்களையும் முற்றிலுமாகத் தவிர்க்க சிலர் முயற்சிப்பர். இந்த முயற்சி மிக அருமையான வழி. ஏனெனில் தப்பிப்பதுதான் விஷயத்தைக் கையாள்வதற்கான சிறந்த வழி என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மெல்ல பதில் அளிப்பது ஏன்? நம் கருத்து சார்ந்த விருப்பம் சார்ந்த விஷயங்களை சிறுவயதில் இருந்தே கட்டுப்படுத்த நமக்குக் கற்பிக்கப்படுகிறது. அப்போது, நம் உணர்வுகளை அடக்கவும், நமது உணர்ச்சிகளைக் குறைக்கவும் முயற்சிக்கிறோம். அதனால் தான், எதனையும் மென்மையாக அணுகும் பக்குவத்தை அடைகிறோம். அவ்வாறு பதில் அளிக்கிறோம். இதுவும் பிரச்னையில் இருந்து விடுபட ஒரு நல்ல வழி ஆகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *