பல புதிய அப்கிரேட்ஸ்களுடன் வெகுவிரைவில் அறிமுகமாக உள்ள Chetak EV!
தனது தயாரிப்புகளால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட புதுப்பிக்கப்பட்ட பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த புதிய ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் Chetak EV ஸ்கூட்டரை குறிப்பிடத்தக்க அப்கிரேட்ஸ்களுடன் கூடிய புதிய 2024 Bajaj Chetak EV ஸ்கூட்டரை வரும் ஜனவரி 5-ஆம் தேதியன்று பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அப்கிரேட் செய்யப்பட்ட இ-ஸ்கூட்டர் ஸ்டைலிங் மற்றும் மெக்கானிக்கல் ரீதியாக நுட்பமான மற்றும் பெரிய திருத்தங்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பஜாஜ் நிறுவனம் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்திலேயே 2024 பஜாஜ் சேட்டக் அர்பன் (Chetak Urbane) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அப்கிரேட்டட் வேரியன்ட்டை அமைதியாக அறிமுகப்படுத்தியது. அதேசமயம் விரைவில் அறிமுகமாகவிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சமீபத்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்Urbane-ஐ விட டாப்-ஸ்பெக் பிரீமியம் டெக்னலாஜி அம்சங்களுடன் வரும் என தெரிகிறது.
2024 Bajaj Chetak-ல் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
தற்போதைய மாடலில் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 113 கிமீ வரை செல்லும் 2.88 kWh பேட்டரி பேக் இருக்கும் நிலையில், விரைவில் வரவிருக்கும் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது ஒரு பெரிய 3.2 kWh பேட்டரி பேக் கொண்டிருக்கும். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 127 கிமீ (IDC) வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 Bajaj Chetak குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி இதில் இடம்பெற உள்ள புதிய பேட்டரியை 0 -100 சதவீதம் வரை முழுமையாக சார்ஜ் செய்ய ஆகும் மொத்த சார்ஜிங் டைம் 4 மணி நேரம் 30 நிமிடங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறனை பொறுத்தவரை தற்போதைய மாடலின் டாப் ஸ்பீட் மணிக்கு 63 கிமீ-ஆக இருக்கும் நிலையில், இதோடு ஒப்பிடும்போது 2024 பஜாஜ் சேட்டக் அதிகபட்சமாக மணிக்கு 73 கிமீ வேகத்தை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாவற்றையும் விட பெரிய அப்டேட் என்று பார்த்தால் ஏற்கனவே இருக்கும் மாடலில் ரவுண்ட் எல்சிடி யூனிட் உள்ள நிலையில், வரவிருக்கும் புதிய மாடலில் புதிய TFT ஸ்கிரீன் இருக்கும் என தெரிகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட டிஸ்ப்ளேவானது டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ரிமோட் லாக்/அன்லாக், ப்ளூடூத் கனெக்டிவிட்டி என மற்றும் பல அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இருக்கும் மாடலின் அண்டர்-சீட் ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி 18 லிட்டராக இருந்து வரும் நிலையில், புதிய மாடலில் இது 21 லிட்டராக இருக்க கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பஜாஜ் சேட்டக் மட்டுமே ஆல்-மெட்டல் பாடியுடன் வரும் ஒரே இ-ஸ்கூட்டராகும். 2020-ஆம் ஆண்டில் முதன்முதலில் Chetak EV அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தொடர்ந்து அப்கிரேட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.