யாருக்கிட்ட இந்நேரம் பேசுற.. பெங்களூரில் நைட்டில் கத்திய கணவன்.. சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த மனைவி
பெங்களூர் உளிமாவு பகுதியில் அடிக்கடி தன்னுயை நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்த காவலாளியான கணவனை ஆத்திரத்தில் கததியால் குத்திக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூர் உளிமாவு பகுதியில் வசிப்பவர் உமேஷ் . இவருக்கு 27 வயது ஆகிறது. இவரது மனைவி மனிஷா. உமேஷ் அந்த பகுதியில் உள்ள கல்வி நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். மனிஷா அந்த பகுதியில் பணக்கார வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். மனிஷா, அடிக்கடி தனது செல்போனில் யாருடனோ பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த உமேஷ் தனது மனைவி வேறு நபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக உறுதியாக நம்பியதுடன்,அடிக்கடி யாருடன் பேசுகிறாய் என்று கேட்டு மணிஷா உடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் உமேஷ், தனது நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டார்
பின்னர் மது அருந்திவிட்டு நள்ளிரவில் உமேஷ் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனிஷா யாருடனோ செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். இந்த நேரத்தில் யாரிடம் போனில் பேசிக்கொண்டிருக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கத்திய உமேஷ், மனிஷாவிடம் ஆவேசத்துடன் தகராறு செய்துள்ளார். அப்போது மனிஷா பதிலே பேசவில்லை. அமைதியாக பார்த்துக்கொண்டே இருந்த மனிஷா, திடீரென வீட்டிற்குள் போனவர், கத்தியை எடுத்து வேகமாக வந்திருக்கிறார். பின்னர்ர உமேசை மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினாராம். இதில் காயம் அடைந்த உமேஷ் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனிடையே உமேஷின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இறந்து கிடந்ததை கண்டு உடனடியாக உளிமாவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர. அவர்கள் உமேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உளிமாவு போலீசார், தொடர்ந்து அவரது மனைவியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு தகராறு செய்ததால், கத்தியால் கணவனை குத்திக்கொன்றதாக மனிஷா போலீசில் நடந்த சம்பவங்களை எல்லாம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் மனிஷாவை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..