“கடவுள் ராமர் குறித்து தவறாக பேசினால் கொலை செய்வேன்” : தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியை மிரட்டிய சாமியார்!
1992-ம் ஆண்டு இந்துத்துவ கும்பல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி இருப்பதாகக் கூறி அங்கிருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது.
இதனால் ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னரும் பாபர் மசூதி விவகாரம் இந்திய அளவில் பரபரப்பான விவகாரமாகத் திகழ்ந்தது. மேலும், பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாள் விசாரணையிலிருந்து வந்தது.
அதனைத் தொடர்ந்து அயோத்தி நில வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியது. அந்த தீர்ப்பில், ராமர் கோயில் கட்ட முழு உரிமை ஒன்றிய அரசுக்கு வழங்கியது.
அதனைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதில் பிரதமர் மோடி உட்பட பாஜகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
#WATCH | Ayodhya, UP: On NCP Sharad Pawar faction leader Jitendra Awhad’s statement, Ayodhya Seer Paramhans Acharya says, “The statement given by Jitendra Awhad is contemptuous and hurts the sentiment of Lord Ram devotees…I would urge Maharashtra and the central government to… pic.twitter.com/nfweYJGbBQ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 4, 2024
இந்நிலையில் ராமர் கோயில் திறப்பு விழா நாளில் மகாராஷ்டிராவில் அசைவ உணவுகளுக்குத் தடை விதிக்கவேண்டும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ராம் கதம் கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிதேந்திர அவாத்,”ராமர் சைவ உணவாளர் இல்லை. வைச உணவு மட்டும் சாப்பிட்டு இருந்தால் அவர் எப்படி 14 ஆண்டுகள் காட்டிலிருந்திருக்க முடியும்” என கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராமர் குறித்து அவதூறாக பேசுபவர்கள்மீது மகாராஷ்டிரா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றான் நான் அவர்களைக் கொலை செய்வேன் என அயோத்திய சீர் பரமன்ஸ் ஆச்சார்யா என்ற சாமி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து கொலை மிரட்டல் விடுத்த சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.