டாடா பஞ்ச் இவி காரின் விலை இவ்வளவு கம்மியா? ரகசிய தகவல் கசிந்தது!

கடந்த 2023 ஆம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் இந்த 2024-ம் ஆண்டும் அதிகமான எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகும் என கணிக்கப்படுகிறது.

முக்கியமாக நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகன பிரிவில் டாடா நிறுவனம் தான் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.

இப்படியாக கடந்த 2023-ம் ஆண்டு அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ள டாடா நிறுவனம் அதைத் தொடர்ந்து தக்க வைக்க 2024 ஆம் ஆண்டு தனது முதல் தயாரிப்பாக எலெக்ட்ரிக் வாகனத்தை தான் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி டாடா நிறுவனம் இந்த வாரமே தனது பஞ்ச் என்ற எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டாடா பஞ்ச் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் பல்வேறு இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன. இந்நிலையில் நமக்கு இந்த டாடா பஞ்ச் இவி கார் குறித்த சில முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தகவல்களை பற்றிய விரிவான விவரங்களை எல்லாம் காணலாம்.

நமக்கு கிடைத்த தகவலின் படி டாடா பஞ்ச் இவி கார் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஒரு பேட்டரி ஆப்ஷன் மீடியம் ரேஞ்ச் என்ற பெயரிலும் மற்றொரு பேட்டரி ஆப்ஷன் லாங் ரேஞ்ச் என்ற பெயரிலும் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. மீடியம் ரேஞ்ச் பேட்டரி ஆப்ஷன் 25 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கையும்,

லாங் ரேஞ்ஜ் பேட்டரி ஆப்ஷன் 35 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பேக்கையும் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்படும் என தெரிகிறது.டாடா பஞ்ச் டிவி கார் டாடா நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை டிவி ஆர்க்கிடெக்சர் பிளாட்பார்மான ஆல்ஃபா பிளாட்பார்மில் தான் உருவாக்கப்படுகிறது. இதில் லிக்யூட் கூல்டு பேட்டரி பொருத்தப்படுகிறது. மேலும் மோட்டாரை பொறுத்தவரை பெர்மனென்ட் மேக்னெட் சிங்க்ரோனைசஸ் மோட்டார் முன்பக்க வீலில் பொருத்தப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் டாட்டா பஞ்ச் டிவி காரின் முன் பக்கம் வேண்டிலேட்டட் சீட்டுகள் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே குறைந்த விலை காரில் இப்படியான சீட்டுகள் பொருத்தப்படுவது இந்த காரில் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாப் வேரியன்டில் நெக்ஸான் காரை போலவே இந்த காரிலும் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம் பெற வாய்ப்புள்ளது மற்ற வேரியன்ட்களில் 7.0 டச் ஸ்கிரீன் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் வெளியான ஸ்பை புகைப்படங்களில் மூலம் நமக்கு இந்த காரில் நான்கு வீடுகளிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இதுபோக காரின் உட்புறம் இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டியரிங் வீல்கள் அமைக்கப்படுகின்றன. வெறும் காரில் உள்ளே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியன இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரின் ஸ்டைலிங் அம்சங்களை பொருத்தவரை இதன் பெட்ரோல் வெர்ஷன் காரில் இருக்கும் அதே ஸ்டைலிங் அம்சங்கள் தான் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்த காரின் முன்புறம் முழு நீள எல்இடி லைட் பார் பொருத்தப்படும் எனவும் புதிய அலாய் வீல் பொருத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா பஞ்ச் இவி கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும்போது இது சிட்ரோன் இசி3 காருடன் நேரடியாக போட்டியிடுகிறது. இந்த கார் விற்பனைக்கு வரும்போது ரூபாய் 10 முதல் 13 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த மற்ற தகவல்கள் எல்லாம் அதிகாரப்பூர்வமாக இந்த கார் அறிமுகமாகும் போது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *