“IPL தொடர் ஒலிம்பிக் தொடருக்கு நிகரான தரத்தை கொண்டுள்ளது” – முன்னாள் ஆஸ். பயிற்சியாளர் புகழாரம் !

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள நிலையில், விரைவில் அதற்கான ஏலம் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு நிகரான தரத்தையும் வரவேற்பையும் கொண்டுள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “ரிக்கி பாண்டிங்கிடம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் பணியாற்றியது குறித்து கேட்டறிந்தேன். அதில் அவர் எந்தளவுக்கு ஐபிஎல் தொடரை விரும்புகிறார் என்ற தம்முடைய அனுபவத்தை என்னிடம் கூறினார்.

நான் மற்றொரு நண்பரான டாம் மூடியிடம் இதுகுறித்து பேசினேன். அவரும் ஐபிஎல் குறித்து பேசினார். ஐபோல் தொடரின் ஒவ்வொரு போட்டியும் தரமாகவும் அனைவரிடமும் நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் ஐபிஎல் மிகவும் விரும்பப்படுகிறது. இதனால் ஒலிம்பிக் ஐபிஎல் தொடர் போல சிறப்பாக இருக்கிறது”என்று கூறியுள்ளார். வரும் ஐபிஎல் சீசனில் ஜஸ்டின் லாங்கர் லக்னோ அணியின் பயிற்சியாளராக பணிபுரியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *