2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்புகள்
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2024 ஆம் ஆண்டிற்கான பிரீமியம் மாடல் ரேஞ்ச் தற்பொழுது 127 கிமீ உயர்த்தப்பட்டு விலை ரூ.1.15 லட்சம் முதல் துவங்கி ரூ.1.45 லட்சம் வரை வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக வந்துள்ள சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிதாக டெக்பேக் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றதாக வந்துள்ளது. டெக்பேக் கனெக்ட்டிவிட்டி ஆப்ஷன் ஆனது ஆப்ஷனலாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
2024 Bajaj Chetak
2023 சேட்டக் பிரிமீயம் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் நிலையில் 2.9Kwh லித்தியம் பேட்டரி பெற்று ரேஞ்ச் 108 கிமீ ஆகவும், டாப் ஸ்பீடு மணிக்கு 63 கிமீ ஆக உள்ளது. ஆப் தொடர்பான கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் 800W சார்ஜர் பெறுவதனால் 3 மணி நேரம் 50 நிமிடங்கள் தேவைப்படும். இந்த மாடலின் விலை ரூ.1.15 லட்சம் ஆகும். கூடுதலாக கனெக்ட்டிவிட்டி வசதியை பெற ரூ.8,000 செலுத்த வேண்டியிருக்கும்.
2024 சேட்டக் பிரீமியம் வேரியண்ட் 3.2 KWh பேட்டரி பெற்று ரேஞ்ச் 127 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டு, அதிகபட்ச வேகம் மணிக்கு 73 கிமீ ஆகும். இந்த மாடலில் தொடுதிரை இல்லாத 5 அங்குல TFT கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு கூடுதலாக டெக்பேக் கனெக்ட்டிவிட்டி ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றது. அதிகபட்சமாக 4 மணி நேரம் 50 நிமிடங்கள் வரை தேவைப்படும். 650 kW போர்டெபிள் சார்ஜ் ஆனது வழங்கப்படுகின்றது.
2024 பஜாஜ் சேட்டக் அர்பேன் வேரியண்டில் 2.9Kwh லித்தியம் பேட்டரி பெற்று 113 கிமீ ரேஞ்ச் வழங்குவதுடன் டெக்பேக் மாடல் மணிக்கு 73 கிமீ வேகத்திலும், டெக்பேக் பெறாத வேரியண்ட் மணிக்கு 63 கிமீ வேகத்தில் பயணிப்பதுடன் அதிகபட்சமாக 4 மணி நேரம் 50 நிமிடங்கள் வரை தேவைப்படும் வகையில் 650 kW போர்டெபிள் சார்ஜ் ஆனது வழங்கப்படுகின்றது.
இந்த மாடலின் அர்பேன் டெக்பேக் இல்லாத வேரியண்ட் ரூ.1.15,002 மற்றும் டெக்பேக் பெற்ற மாடல் ரூ.1,23,001 ஆகும்.
TecPac வாங்குபவர்கள், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், திரை இசைக் கட்டுப்பாடுகள், அழைப்பு எச்சரிக்கைகள், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், ரிவர்ஸ் மோட் மற்றும் டிஸ்பிளேயின் தீம் தனிப்பயனாக்குவதற்கான விருப்பம் போன்ற கூடுதல் அம்சங்களை பெறலாம்.