குளிர்காலத்தில் தாக உணர்வு இல்லாத நிலையா? – தவிர்க்க சில டிப்ஸ்!
குளிர்காலத்தில் உடல் நலமில்லாமல் போவதற்கு ஒரு காரணம், உடலில் நீர்ச்சத்து குறைந்துபோதல் எனலாம். குறைவான தண்ணீரைக் குடிப்பது செரிமானத்தைப் பாதிக்கிறது. உடல் வெப்பநிலை, நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் உள்ளிட்டப் பல்வேறு உடல் செயல்பாடுகளை இது பாதிக்கிறது.
குளிர்காலத்தில் உண்டாகும் தலைவலி, மலச்சிக்கல் மற்றும் சோம்பேறித்தனமாக இருப்பதற்கு நம்மிடம் இருக்கும் தாக உணர்வும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனை பலர் கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர்.
உடலை நீரேற்றம் செய்ய சூடான பானங்களுடன் உங்கள் காலைகளைத் தொடங்குங்கள். அவ்வப்போது போதுமான அளவு நீரை எடுத்துக்கொள்ளவேண்டுமாம்.
குளிர்காலத்தில் நீரிழப்பு ஏன் பொதுவானது?
குளிர்காலத்தில் நமக்குத் தாக உணர்வு குறைவாகவே இருக்கும். குளிர்ந்த வெப்பநிலை இருந்தபோதிலும், வறண்ட காற்றும் நம்மை தாக உணர்வு இல்லாமல் வைத்துக்கொள்கின்றன. இதனால் உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது.
உடலில் நீரேற்றம் குறையாமல் இருக்க ஊட்டச்சத்து நிபுணர் கூறியவை:-
1. உணவின்போது நீரினை தவறாமல் எடுத்துக்கொள்ளவும்: ஒவ்வொரு முறை உணவு உண்ணும்போதும் உண்டுமுடித்தபின், குடிநீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது ஒவ்வொரு நாளும் தேவையான அளவு குடிநீர் குடிப்பதை உறுதி செய்யும். நீங்கள் நீரில் எலுமிச்சை, ஆரஞ்சு துண்டுகளைச் சேர்ப்பதன் மூலமும் சுவையை அதிகரிக்கலாம்.
2. நீரேற்ற உணவுகளைத் தேர்வுசெய்க: சூப்கள் மற்றும் குழம்பு அடிப்படையிலான உணவுகள் குளிர்காலத்தில் ஆறுதலாக இருப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடலில் நீரேற்றத்திற்கும் பங்களிக்கின்றன. கூடுதலாக, பெர்ரி, தக்காளி போன்ற அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளில் கவனம் செலுத்துங்கள்.
3. எலக்ட்ரோலைட்டுகளைச் சேர்க்கவும்: உடலில் எலக்ட்ரோலைட் நிறைந்த பானங்களைக் குடிப்பதன் மூலம் நீரிழப்பால் ஏற்படும் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு அபாயத்தை எதிர்த்துப் போராடுங்கள். உடற்பயிற்சி செய்த பிறகு, இளநீர் குடிக்கலாம். மாற்றாக, உங்கள் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு அல்லது எலக்ட்ரோலைட் தூள் சேர்த்து குடிக்கலாம்.
4. இனிப்பு உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ளவும்: இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற நீரேற்றம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உங்கள் உணவில் சேர்க்கவும். இந்த காய்கறிகள் அத்தியாவசிய பொட்டாசியம் மற்றும் வைட்டமின்களை வழங்குகின்றன. இது உடலில் உகந்த நீரேற்ற அளவை அதிகரிக்கின்றன.
5. நீரேற்ற வழக்கத்தை அமைக்கவும்: நீங்கள் தாகமாக உணரும்போது மட்டுமல்லாமல், நாள் முழுவதும் தொடர்ந்து தண்ணீர் குடிக்க முயற்சியை மேற்கொள்ளுங்கள்.
உடலில் ஈரப்பதத்தின் அளவைக் கட்டுப்படுத்த அறைகளில் ஈரப்பதமூட்டிகளைப் பயன்படுத்தலாம் என்றும், சருமத்தை ஹைட்ரேட் செய்ய மாய்ஸ்சரைசர்களை தவறாமல் பயன்படுத்தலாம் என்றும் டாக்டர் பாலியன் கூறுகிறார்.
6. சூடான பானங்களைச் சேர்க்கவும்: மூலிகை தேநீர் மற்றும் சூடான பானங்களை உங்கள் தினசரி வாழ்வியல் முறையில் எடுத்துக்கொள்ளலாம்.
7. சரும ஈரப்பதமாக்கல்: சருமத்தின் வழியாக அதிகப்படியான நீர் இழப்பைத் தடுக்க மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துவதன் மூலம் நீரிழப்பைத் தவிர்க்கலாம்.
ஆரோக்கியமான சருமத்தை உருவாக்குவது என்பது ஒட்டுமொத்த உடல் திரவங்களைத் தக்கவைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.