Bus Strike: போக்குவரத்து தொழிலாளர்களில் பிரச்சனையில் விடிவு கிடைக்குமா? பேச்சு வார்த்தைக்கு அழைப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சு வார்தைக்கு தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக ஜனவரி 19ம் தேதி அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஜனவரி 8ம் தேதியே பேச்வார்த்தை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் நலத்துறை இணை ஆணையர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 15-ஆம் ஊதிய ஒப்பந்தப் பேச்சுகளை உடனே தொடங்க வேண்டும்; ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்துக் கழகங்கத்துடன் இணைந்து முத்தரப்பு பேச்சு வார்த்தை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடந்தது. இதில் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ரமேஷ், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோ மற்றும் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆனால் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில் சென்னையில் நடந்த முத்தரப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்து விட்டது. இந்நிலையில் வரும் 9-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதைத்தொடர்ந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்து துறை நேற்று உத்தரவிட்டது. அதில்,

-போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும்.

-வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.

-ஊழியர்கள் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு என அனைத்து விதமான விடுப்புகளையும் தவிர்த்து, பணிக்கு வந்து சீரான பேருந்து இயக்கம் அமைய உதவ வேண்டும்.

-சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் போக்குவரத்து தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்தைக்கு தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *