அரிசியை சமைக்கும் போது 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்! நீங்களும் இந்த தவறை செய்றீங்களான்னு பாருங்க..

இந்தியாவின் பிரதான உணவு தான் சாதம். இந்தியர்களால் ஒரு நாள் கூட சாதம் சாப்பிடாமல் இருக்க முடியாது.

ஒரு நாளில் ஒரு முறையாவது சாதத்தை சாப்பிட்டுவிட வேண்டும். சாதத்தைக் கொண்டு பலவிதமான சுவையான உணவுகளை சமைக்க முடியும்.

அப்படிப்பட்ட சாதத்தை இந்தியர்கள் எப்போதும் சரியாக சமைப்பார்கள் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் உண்மையில் இன்னும் நிறைய பேர் சாதத்தை சமைக்கும் போது தவறுகளை செய்கிறார்கள். இப்படி செய்யும் தவறுகளால் பல செரிமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

எனவே அரிசியை சரியான முறையில் சமைக்க ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்களுக்கு அரிசியை சமைக்கும்போது எந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். நீங்கள் இந்த தவறுகளை செய்து வந்தால் உடனே அதை நிறுத்துங்கள்.

அரிசியை கழுவாமல் சமைப்பது

நீங்கள் அரிசியை சமைக்கும் போது சரியாக கழுவாமல் பயன்படுத்துவீர்களா? அப்படியானால் அது தான் முதல் தவறு. எப்போதுமே அரிசியை சமைக்கும் போது நீரில் அரிசியைப் போட்டு நன்கு கையால் பிசைந்து ஒருமுறைக்கு 2-3 முறை நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் அரிசியில் மேல் மாவுச்சத்து இருக்கும். சரியாக கழுவாமல் அரிசியை சமைக்கும் போது, அது சாதத்தில் ஒரு பிசுபிசுத்தன்மையை ஏற்படுத்தும். எனவே இதைத் தவிர்க்க 2-3 முறை அரிசியை கழுவ வேண்டும். இதனால் சாதம் நன்கு பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும்.

சரியான அளவில் நீரை ஊற்றாமல் சமைப்பது

அரிசியை நன்கு கழுவியும் உங்கள் சாதம் எதிர்பார்த்தவாறு சரியான பதத்தில் வேகவில்லை என்றால், நீங்கள் அரிசிக்கு சரியான அளவில் நீரை ஊற்றவில்லை என்று அர்த்தம். எப்போதும் அரிசியும், நீரும் சரியான விகிதத்தில் இருந்தால் தான், அந்த சாதம் நன்கு வெந்து இருக்கும். உதாரணமாக, வெள்ளை அரிசியை வேக வைக்கும் போது, ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் நீரை ஊற்ற வேண்டும்.

வெள்ளை அரிசி மற்றும் கைக்குத்தல் அரிசியை ஒரே மாதிரி சமைப்பது

அரிசியை சமைக்கும் போது செய்யும் மற்றொரு தவறு, வெள்ளை அரிசி மற்றும் கைக்குத்தல் அரிசியை ஒரே மாதிரி சமைப்பது தான். கைக்குத்தல் அரிசியை சமைக்கும் போது, வெள்ளை அரிசிக்கு பயன்படுத்தும் நீரை விட 1/2 டம்ளர் அதிகமாக நீரை ஊற்ற வேண்டும். மேலும் வெள்ளை அரிசியை சமைக்க 15 நிமிடங்கள் ஆகலாம். ஆனால் கைக்குத்தல் அரிசியை வேக வைக்க 50 நிமிடங்கள் வரை ஆகக்கூடும்.

உயர் தீயில் அரிசியை சமைப்பது

நிறைய பேர் அரிசியை சமைக்கும் போது செய்யும் தவறு. உயர் தீயில் வைத்து சமைப்பது தான். எப்போதுமே எந்த ஒரு உணவையும் உயர் தீயில் வைத்து சமைக்கும் போது, அந்த உணவில் உள்ள சத்துக்களை அழித்துவிடும். எனவே அரிசியை ஆரோக்கியமான வழியில் சமைக்க நினைத்தால், மிதமான தீயில் வைத்து, அரிசியை சமையுங்கள்.

சாதத்தை உடனே பரிமாறுவது

சாதம் நன்கு வெந்ததும், அதை உடனே பரிமாற எடுக்காதீர்கள். 10-15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, அதன் பின் பரிமாறுங்கள். இதனால் சாதம் குலைந்து போகாமல் நன்கு பொலபொலவென்றும், பஞ்சு போன்றும், நல்ல அமைப்புடனும் இருக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *