அரவிந்த் ராஜ் இயக்கத்தில் வேலுநாச்சியார் வாழ்க்கை கதை
இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலு நாச்சியாரின் கதை ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது.
டிரண்ட்ஸ் சினிமாஸ் சார்பில் ஜெ.எம். பஷீர் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆர். அரவிந்தராஜ் இயக்குகிறார். ஜெ.ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து அறிமுகம் ஆகிறார் ஆயிஷா. இதில் பெரிய மருதாக படத்தின் தயாரிப்பாளர் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
ஜெ.எம்.பஷீர் பேசும்போது, “வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை திரையில் கொண்டு வருவதில் பெருமை அடைகிறோம். இதில் முதன்மை வேடத்தில் எனது மகள் ஆயிஷா நடிப்பது பெரும் மகிழ்ச்சி” என்றார்