விஜயகாந்த் வீட்டில் இருந்து வந்த போன்.. நடிகர் ராதா ரவி சொன்ன விஷயம்
அந்த வகையில் நடிகர் ராதாரவி விஜயகாந்த் உடனான நட்புறவு குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நானும் விஜயகாந்த்தும் ஒன்றாக பல படங்களில் நடித்துள்ளோம். அவை ஒரு சீசன் போல அமைந்துவிட்டது. நட்பு பிரிவதற்கு கருத்து வேறுபாடு ஏற்படுவது தான் காரணமாக இருக்க முடியும். ஆனால் எங்களுக்கு இடையே அப்படி ஒரு கருத்து வேறுபாடு வந்தது கிடையாது.
என்னை பார்ப்பதற்காக நான் நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விஜயகாந்த் வருவார். நான் அவரை பார்க்க அவரது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போவேன். ஒவ்வொருவருக்கும் ஒரு குணங்கள் இருக்கும். நான் ஒருவரை கண்டபடி திட்டுவேன். ஆனால் அவர்கள் மீது அதிக அன்பு காட்டுவேன். அதேபோல் மற்றவர்களுக்கு உதவி செய்வது விஜயகாந்தின் குணமாக இருந்தது.
சமீபத்தில் விஜயகாந்த் உடல்நலம் குணமடைந்து வீட்டிற்கு வந்தார். அப்போது ‘அவரை பார்க்க வேண்டும் என்று சொன்னீர்களே, நலமுடன் இருக்கிறார். நேரில் வந்து பாருங்கள்’ என்று என்னிடம் சொல்வதற்காக பிரேமலதா எனக்கு போன் செய்திருந்தார். ஆனால் நான் அந்த போனை எடுக்காமல் தவறு செய்து விட்டேன். ஒருவேளை அப்படி நான் அந்த போனை எடுத்திருந்தால் விஜயகாந்தை ஒருமுறை நேரில் உயிருடன் பார்த்திருப்பேன். அந்த வாய்ப்பை இழந்து விட்டேன். இதனை அஞ்சலி செலுத்தும்போது பிரேமலதா என்னிடம் தெரிவித்தார்” என்று கூறியுள்ளார்.