இந்த சிறுவன் இப்போது பான் இந்தியா ஹீரோ? யார்னு கண்டுபிடிக்க முடிகிறதா?
படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த சிறுவன் இப்போது இந்திய அளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர்.
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருந்த இவரை 2015, 2017 இல் வெளியான படங்கள் இந்திய அளவில் பிரபலம் ஆக்கின.
தமிழ்நாட்டிலும் இந்த ஹீரோவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அந்த சிறுவன் வேறு யாருமல்ல. பாகுபலி படங்களின் கதாநாயகன் பிரபாஸ் தான் அவர்.
பாகுபலி 1 மற்றும் 2 படங்களுக்காக சுமார் 5 ஆண்டுகளாக பிரபாஸ் தன்னை அர்ப்பணித்திருந்தார்.
பாகுபலி படங்களுக்கு பின்னர் வெளிவந்த சாஹோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
சாஹோவை தொடர்ந்து ராதே ஷ்யாம், ஆதி புருஷ் படங்கள் வெளிவந்தன.
இவ்விரு படங்களும் தோல்வியை சந்தித்ததால் பிரபாஸிற்கு பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் வெளியான சலார் திரைப்படம் வர்த்தக மற்றும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது சலார் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 700 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.