இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் – முதல்வர் மு.க ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து..!!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்..
இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது 57வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
அதேபோல மநீம தலைவரும், நடிகருமான கமல்ஹாசனும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரஹ்மான் ஜி. உங்களுடன் மீண்டும் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன், மேலும் உங்களிடமிருந்து அனைவருக்கும் சிறந்த இசையை எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்..