Actor Abhirami: இந்த புத்தகங்கள் வாழ்க்கையை மாத்துச்சு.. விருமாண்டி அபிராமியோட சாய்ஸ் இந்த புத்தகங்கள்தான்..

விருமாண்டி திரைப்பட நடிகை அபிராமி தனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களை பற்றி சமீத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

 

தமிழ் திரையுலகில் ‘வானவில்’ படத்தின் மூலம் அர்ஜூன் ஜோடியாக நடித்து அறிமுகமானவர் அபிராமி. ‘மிடில் க்ளாஸ் மாதவன்’, தோஸ்த், சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி படத்தில் ‘அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் எல்லாருக்கும் ஃபேவரைட் ஆனார். அன்னலட்சுமி கதாபாத்திரத்தில் மிகவும் திறமையாக நடித்திருந்தார். அதன்மூலம் அபிராமிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

விருமாண்டி படத்திற்கு பிறகு பத்தாண்டுகளாக எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை. பிறகு, ‘36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். தமிழ் சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் பிஸியாக இருக்கிறார். அபிராமி நடிப்பில் ‘ஆர் யூ ஓகே பேபி’ படம் வெளியாக உள்ளது. தெலுங்கில் ‘வாஷிங்மெஷின்’ , தமிழில் ‘மகாராஜா’, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ ஆர் யு ஓகே பேபி’, சக்தி சிதம்பரம் இயக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய படங்களில் நடிச்சு முடிச்சிருக்காங்க. அடுத்தடுத்து சில படங்களிலும் நடிக்க இருக்காங்க. பிஸியாக இருக்கும் அபிராமி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனதுக்கு பிடித்த புத்தங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

அபிராமி பரிந்துரைக்கும் புத்தகங்கள்

” எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் – ‘A poem to courage; மனோகர் தேவதாஸ் எழுதியது. அவர் எனக்கு நல்ல நண்பர். எனக்கு கடிதங்கள் எழுதி அனுப்புவார். நான் அமெரிக்காவில் இருந்தப்ப எனக்கு கடிதங்கள் எழுதி அனுப்பியிருக்கிறார். அவருக்கு ’Tunnel vision’ பாதிப்பு இருந்தப்பவும் ‘magnifirer’ பயன்படுத்தி சிறிய மலர் கூட வரைந்து அனுப்பியிருக்கார். அவர் நல்ல ஓவியரும் கூட. அவர் எழுதிய A poem to courage எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.” மிசேல் ஒபாமா எழுதிய ‘Becoming’ எனக்குப் பிடிக்கும். என்று தெரிவித்தர்.

தன் வாழ்க்கையில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் பற்றி கூறுகையில்,” Dan Harris எழுதிய ’10% Happier’ புத்தகம். அவர் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். அவரின் வாழ்வியல் முறை, மன சிக்கல் ஆகியவற்றின் காரணமாக ஒருநாள் செய்தி நேரலையில் அவரின் மன உளைச்சலால் Panic Attack வந்தது. அன்றிலிருந்து அவருடைய வாழ்கையை மாற்றினார். வாழ்வியல் முறையை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். அந்த நிகழ்விற்கு பிறகு 10% -வது வாழ்கையில் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதை பின்பற்ற தொடங்கினார். அது எனக்கு மிகவும் உதவியது. இந்தப் புத்தகம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பெரிதும் உதவும். ‘The power of now’ புத்தகம் ‘Eckhart Tolle’ எழுதியது. ‘The Art of Racing in the Rain ‘ எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். இதில் நான் ஒன்று கதை சொல்லும். ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை நாய் ஒன்றின் வருகை எப்படி மாற்றுகிறது எனபது புரியும்.” என சில புத்தகங்களை பரிந்துரைத்துள்ளார்.

’ஜாலியோ ஜிம்கானா’

ஜாலியோ ஜிம்கானா திரைப்படம் பற்றி பகிர்ந்துகொண்ட அபிராமி, “இந்தப் படத்தில் நடித்தது எனக்கு நல்ல அனுபவம்; புதியதும் கூட. காமெடி படம் என்பதால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது” என நெகிழ்ச்சியுடன் நேர்காணலில் குறிப்பிட்டார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *