இன்று மாலை 5 மணிக்கு. தனுஷ் ரசிகர்கள் தயாரா..?
தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், ஜான் கொக்கன், நிவேதிதா சதிஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யு/ஏ சான்றிதழ் பெற்ற இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் தொடர்பாக புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. இன்று இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாலை 5 மணி அளவில் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.