ரூ.16 லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பூர்ணிமா
சினிமா: பிக் பாஸ் வீட்டில் இருந்து பூர்ணிமா ரூ. 16 லட்ச ரூபாய் பணத்தோடு வெளியேறியுள்ளார். இவரது வீட்டில் மேளதாளத்தோடு இவருக்கு வரவேற்புக் கொடுத்துள்ளனர்.
பிக் பாஸ் இல்லத்தில் பணப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சத் தொகையாக ரூ.16 லட்சம் வைத்திருந்தனர்.
இதைப் பார்த்த பூர்ணிமா ரவி, தான் அந்தப் பணத்தை எடுக்க முடிவெடுத்துள்ளதாகப் போட்டியாளர்களிடம் அறிவித்தார். மேலும், இத்தனை நாட்கள் போட்டியாளர்களை அட்டாக் செய்ததற்காக அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டுள்ளார். பூர்ணிமா எடுத்தது புத்திசாலித்தனமான முடிவு என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பணப்பெட்டியோடு வீடு திரும்பிய பூர்ணிமாவுக்கு அவரது வீட்டில் மாலை அணிவித்து மேள, தாளத்தோடு வரவேற்புக் கொடுத்துள்ளனர். பூர்ணிமாவும் மகிழ்ச்சியோடு தன் நண்பர்களுடன் தெருவில் குத்தாட்டம் போட்டுள்ளார்.
பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து அவரை குடும்பத்தார் வரவேற்றுள்ளனர். மேலும், கேக் வெட்டியும் பூர்ணிமாவை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளனர். பூர்ணிமா பணப்பெட்டியோடு வெளியேறிய எபிசோட் இன்று ஒளிபரப்பாகும். முன்பு விசித்ரா பணப்பெட்டியோடு வெளியேறுவார் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.