பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வேண்டும்… அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 முதல் 18ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பண்டிகை தினங்களில் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு பொங்கல் அன்று சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான், தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் மற்றும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஏதாவது ஒரு திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் படங்களுக்கு சிறப்பு காட்சிக்கான அனுமதி வழங்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் ஜனவரி 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை காலை இருக்கும் என் முதல் இரவு 2 மணி வரை திரைப்படங்களை திரையிட அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான லியோ சிறப்பு காட்சிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் லலித்குமார் கோரிக்கை வைத்தார். அது சர்ச்சையான நிலையில் காலை 9 மணியிலிருந்து சிறப்பு காட்சி திரையிட அரசு அனுமதி அளித்தது. இதே முறையே தீபாவளி பண்டிகைக்கு வெளியான படங்களுக்கும் அரசு வழங்கியது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு காட்சிக்கான அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால் காலை 8 மணி முதல் இரவு 2 மணி வரை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.