அடடே.. நம்ம சிம்பு, த்ரிஷாவா இது… க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல்..
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறினாலும் ஒரு சில ரீல் ஜோடிகள் என்றுமே ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடிப்பார்கள்.
அதில் ஒரு பெஸ்ட் ஆன் ஸ்க்ரீன் பேர் தான் நடிகர் சிம்பு மற்றும் நடிகை திரிஷா.
க்யூட் ஜோடி :
சிம்பு – திரிஷா இருவரும் முதலில் ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் ‘அலை’. 2003ம் ஆண்டு வெளியான இப்படத்தை விக்ரம் குமார் இயக்கி இருந்தார். அதை தொடர்ந்து 7 ஆண்டுகள் கழித்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற ரொமான்டிக் காதல் திரைப்படத்தில் மீண்டும் இந்த ஜோடி இணைந்தனர். இப்படத்தில் கார்த்தி – ஜெஸ்ஸியாக ரசிகர்களை இதயங்களை துளைத்தனர்.
அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி அப்படத்தில் மிகவும் அற்புதமாக இருக்கும். அப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனம், பாடல் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் இன்றும் ஃப்ரெஷாக இருக்கிறது. இந்த ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாற வேண்டும் என்பது ஏராளமான ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. மீண்டும் இந்த ஜோடி எப்போது இணையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
த்ரோபேக் வீடியோ :
இந்நிலையில் கலை நிகழ்ச்சி ஒன்றுக்காக இருவரும் இணைந்து ஆடும் வீடியோ மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில் சிம்பு நடித்த தம் படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடலான ‘சாணக்கியா சாணக்கியா’ பாடலுக்கு நடனமாட நடிகர் சிம்புவும், த்ரிஷாவும் இருவரும் இணைந்து டான்ஸ் பிராக்டிஸ் செய்து கொண்டு இருக்கும் த்ரோபேக் வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த வீடியோவை பார்த்த திரிஷா மற்றும் சிம்பு ரசிகர்கள் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகிறர்கள்.