நாக சைதன்யாவுடன் டேட்டிங்கா.? கடுப்பான நடிகை ஷோபிதா
சினிமா: சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் நடிகர்கள் சமந்தா மற்றும் நாகசைதன்யா. இந்த ஜோடி கடந்த 2017- ம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர்.
ஆனால், இந்த ஜோடி கடந்த 2021-ம் ஆண்டிலேயே தங்களது பிரிவை அறிவித்தனர். இவர்களது பிரிவுக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. நாக சைதன்யாவுடனான பிரிவால் சமந்தா மிகவும் கஷ்டப்பட்டதாக சமூக வலைதளங்களில் தெரிவித்தார்.
அதன் பிறகு சினிமாவில் தீவிரமாகக் கவனம் செலுத்தத் தொடங்கினார் சமந்தா. அவருக்கு ரசிகர்களும் அதிக அளவில் ஆதரவு கொடுத்தனர். இப்போது சமந்தா மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த வருடம் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்கவுள்ளார். இதற்கிடையில்தான் நாக சைதன்யாவும், நடிகை ஷோபிதாவும் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்பட்டது.
இவர்கள் இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சலசலப்பைக் கிளப்பியது. ஆனால், இதுகுறித்து இருவரும் பதிலளிக்காமல் மவுனம் காத்து வந்தனர். இப்போது ஷோபிதா இதற்குப் பதில் கூறியுள்ளார். “உண்மை என்ன என்று தெரியாமல் பேசுபவர்களுக்கும், தெரியாத தகவல்களை எழுதுபவர்களுக்கும் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நான் எந்த தவறும் செய்யாத போது அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் பதில் கொடுக்க வேண்டும். எப்போதும் அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதை விட அவரவர் வாழ்க்கையைப் பார்த்து சொல்வதே மேல்!” எனக் காட்டமாக பதில் கூறியுள்ளார்.