எதையும் விடுவதில்லை ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி அடுத்த மெகா என்ட்ரிக்கு ரெடி..!
இந்தியாவின் பெரும் பணக்காரர் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் நிறுவனங்கள் கையாளாத துறைகளே இல்லை என்று சொல்லலாம்.
இந்தியாவில் உள்ள மதிப்பு மிக்க டாப் 500 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும் ஒன்றாகும். மிகப் பெரிய தனியார் நிறுவனமாகவும் உள்ளது. ரிபைனரி, எனர்ஜி, பெட்ரோகெமிக்கல்ஸ், தகவல்தொடர்பு உள்பட பல்வேறு தொழில்களில் மிக லாபகரமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயங்கி வருகிறது. அதன் துணை நிறுவனமாக கடந்த ஆண்டு ஜியோ பைனான்சியல் சர்வீஸஸ் தொடங்கப்பட்டது. முகேஷ் அம்பானியின் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் பிளாக் ராக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மியூச்சுவல் பண்டு லைசென்ஸுக்கு விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் தற்போது செக்யூரிட்டிஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியாவான செபியின் பரிசீலனையில் உள்ளது.இந்தியாவின் ரூ.1,75,9000 கோடி மதிப்புமிக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் இருந்து 2023 ஆகஸ்ட் மாதத்தில் பிரித்து உருவாக்கப்பட்ட ஜியோ பைனான்சியல் சர்வீஸ் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ், ரிலையன்ஸ் அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன், ரிலையன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகியவை ஜியோ பைனான்சியல் சர்வீஸஸ் கீழ் சேவை வழங்கப்பட உள்ளன. இப்போது பிளாக்ராக் நிறுவனத்துடன் 50:50 என்ற விகிதத்தில் ஜியோ பைனான்சியல் சர்வீஸஸ் கூட்டு பிசினஸ்ஸை தொடங்கியுள்ளது. இரு நிறுவனங்களும் தலா ரூ.1200 கோடியை முதலீடு செய்துள்ளன. 2022 ஆம் ஆண்டின்படி பிளாக்ராக்கின் சொத்து மதிப்பு மொத்தம் 8.2 டிரில்லியன் ஆகும். ரூ.50 லட்சம் கோடி மதிப்புள்ள மியூச்சுவல் பண்டு துறையில் முகேஷ் அம்பானி ஆதரவுள்ள மியூச்சுவல் பண்டுகளில் டிஜிட்டல்-ஃபர்ஸ்ட் அணுகுமுறையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.