ஐடி துறையில் பெரும் மாற்றம்.. சென்னை, பெங்களூர்-க்கே இந்த நிலைமையா..?
இந்தியாவில் அதிகப்படியான வேலைவாய்ப்பு, வருமானத்தை ஈட்டும் துறையாக இருப்பதோடு, நாட்டின் பெரும் பகுதி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய துறையாக ஐடி துறை விளங்குகிறது.
இத்தகைய ஐடி துறையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரும் மாற்றம் நடந்துள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.இந்தியாவில் உள்ள கோடிக்கான டெக் ஊழியர்கள் தாங்கள் அதிகம் விரும்பி பணியாற்று நகரம் குறித்து ஆய்வு செய்யப்பட்ட போது அதிர்ச்சி அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது. இந்தியா முழுவதும் டெக் ஊழியர்கள் அதிக சம்பளம், நல்ல சூழ்நிலைக்காக பெங்களூர், சென்னை தேடி வரும் காலம் தற்போது மாறியுள்ளதாக தெரிகிறது. ஆம்பிஷன் பாக்ஸ் இன்சைட்ஸ் தரவுகள் படி இந்தியாவின் டெக் ஊழியர்கள் தாங்கள் அதிகம் விரும்பி பணியாற்று நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது புனே.இதைவிட அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் பெங்களூர் 3வது இடத்திற்கும், சென்னை 4வது இடத்திற்கும் தள்ளப்பட்டு ஹைதரபாத் 2வது இடத்திற்கு வந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.தென்னிந்தியாவில் ஐடி சேவை மற்றும் டெக் துறையென்றாலே சென்னை, பெங்களூர் தான் என்று இருந்த காலம் மாறி தற்போது ஹைதராபாத் முன்னேறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டு GCC காலமாக பார்க்கப்பட்ட நிலையில் இந்தியாவிலேயே அதிகப்படியான ஜிசிசி அலுவலகங்களை பெற்ற நகரமாக ஹைதராபாத் இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சிலிக்கான் வேலி என்ற பட்டத்தை பெங்களூர், ஹைதராபாத் நகரத்திடம் விட்டுக்கொடுத்து வருகிறது என்ற பேச்சு நிலவிய வேளையில் தற்போது இது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் சாப்ட்வேர் ஏற்றுமதி மற்றும் வருவாய் ஆகியவற்றை வைத்து பட்டத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பும் உள்ளது.சரி டெக் ஊழியர்கள் அதிகம் விரும்பி பணியாற்று நகரங்கள் பட்டியலில் புனே, ஹைதராபாத், பெங்களூர், சென்னை ஆகியவை முதல் 4 இடத்தை பிடித்த நிலையில் டெல்லி என்சிஆர், மும்பை, கொல்கத்தா ஆகியவை அடுத்த 3 இடங்களை பிடித்துள்ளது.எது எப்படியிருந்தாலும் தற்போது ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் அனைத்தும் பெரு நகரங்களை விடுத்து 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு சென்று வரும் வேளையில் இனி வரும் காலத்தில் போட்டி மெட்ரோ நகரங்களை கடந்து அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், இந்தூர், கோயம்புத்தூர், திரச்சி ஆகியவற்றுக்கு மத்தியில் இருக்கும். சரி உங்களுக்கு பிடித்த நகரம் எது..? மறக்காம கமெண்ட் பண்ணுங்க.