MS தோனி ஏமாற்றப்பட்டார்? 15 கோடி இழப்பாம்.. கடுப்பான தோனி 2 பேர் மீது கிரிமினல் வழக்கு..!

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, ஆர்கா ஸ்போர்ட்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட்டை சேர்ந்த மிஹிர் திவாகர், சௌம்யா விஸ்வாஸ் ஆகியோர் மீது 15 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டதாக ராஞ்சி நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கை தொடர்ந்துள்ளார்.2017 ஆம் ஆண்டில் எம்எஸ் தோனியுடன் உலகளவில் கிரிக்கெட் அகாடமியைத் தொடங்குவது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளைப் பின்பற்றுவதற்கு திவாகர் தவறிவிட்டார். ஒப்பந்தப்படி ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பிரான்சைஸ் கட்டணத்தையும் லாபத்தில் பங்கையும் தோனிக்கு தரவேண்டும். ஆனால் அப்படி ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் செய்யவில்லை.இதுபற்றி பலமுறை கேட்டுப் பார்த்தும் ஒப்பந்தத்தில் உள்ள விதிகளையும் நிபந்தனைகளையும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் மதிக்காததால் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று ஆர்கா ஸ்போர்ட்ஸுக்கு தந்த தனது அனுமதிக் கடிதத்தைத் திரும்பப் பெற்றார்.கருப்பு சட்டை, கருப்பு கார்.. தோனி வந்த 3 கோடி ரூபாய் கார் நம்பர் ப்ளேட்டை பாருங்க.. செம வீடியோ..!! இது தொடர்பாக பலமுறை சட்டப்படி நோட்டீஸ்களை அனுப்பியும் எந்தப் பலனும் இல்லை. இதுபற்றி தோனியின் வழக்கறிஞர் தயானந்த் சிங் கூறுகையில், ஆர்கா ஸ்போர்ட்ஸ் தோனியை ஏமாற்றியுள்ளதால் அவருக்கு ரூ.15 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். இந்த நிலையில் தோனியின் நண்பரான சிட்டு என்ற சிமந்த் லோஹானியும் ஒரு புகார் அளித்துள்ளார்.இந்த புகாரில் ஆர்கா ஸ்போர்ட்ஸ் மீது சட்டரீதியக நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து தன்னை மிஹிர் திவாகர் மிரட்டியதாகவும் மோசமாகத் திட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அண்மையில் தோனி வீடு திரும்பினார். தோனியை அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் வரவேற்றனர். துபாயில் தோனியுடன் சக கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட்டும் சென்றிருந்தார். துபாயில் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் கொண்டாடினார்.ஷாருக் கான் முதல் தோனி வரை.. ஆட்டிப்படைக்கும் நியூமராலஜி மோகம்!டிசம்பர் 19 ஆம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முறையாக நடைபெற்ற ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த ரிஷப் பன்ட்டும் தோனியுடன் சேர்ந்து கொண்டார். 2022 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கார் விபத்தில் பலத்த எலும்பு முறிவு காயங்கள் அடைந்த ரிஷப் பன்ட் இப்போதுதான் உடல் நலம் தேறிவருகிறார். மினி ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகிகளுடன் பன்ட் அமர்ந்திருந்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *