வாரிசு கைக்கு அதிகாரத்தை கொடுத்த கௌதம் அதானி.. முக்கிய மாற்றம்..!!
இந்திய கோடீவரரான கௌதம் அதானியின் மகன் கரண் அதானி, அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோனின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.
முன்னதாக அந்த நிறுவனத்தின் சிஇஓவாக கரண் அதானி பதவி வகித்தார்.அதானி குரூப்பின் தலைவரான கௌதம் அதானி இதுவரை அந்த நிர்வாக இயக்குநர் பதவியை வகித்து வந்தார். தன் மகனுக்கு வழிவிட்டுள்ள கௌதம் அதானி இப்போது அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோனின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோனின் புதிய சிஇஓ-ஆக நிஸான் மோட்டார்ஸின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்த அஷ்வனி குப்தா நியமிக்கப்பட்டார்.அமெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை கரண் அதானி முடித்து, 2009இல் அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் வேலைக்கு சேர்ந்தார். 2016இல் சிஇஓவாக பதவியேற்று, இப்போது அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோனின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இதன் சந்தை மதிப்பு ரூ.2,36,000 கோடி ஆகும்.அதானி குரூப்பின் அன்றாட வேலைகளை செயல்படுத்துவதில் முக்கியப் பங்கை கரண் வகித்துவந்தார். அத்துடன் 2022 செப்டம்பரில் இருந்து கரண் அதானி ஏசிசி என்ற சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநராகவும் பதவி வகித்தார்.கரண் அதானி பரிதி ஷெராஃபை திருமணம் செய்து கொண்டார். இவர் சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் சட்ட நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான சிரில் ஷெராஃபின் மகள் ஆவார். இதன் மூலம் கரண் அதானிக்கு உள்ள சக்தி வாய்ந்த தொடர்புகளில் புதியதொரு வரவாக வந்து சேர்ந்தார் பரிதி ஷெராஃப். கரண் அதானிக்கும் பரிதி ஷெராஃபுக்கும் ஒரு மகள் இருக்கிறார்.படிப்பு முடிந்தவுடனேயே கரண் அதானி தனது குடும்ப நிறுவனமான அதானி குரூப்பில் சேர்ந்து விட்டார். அப்போது நிதி, மார்க்கெட்டிங், ஆபரேஷன்ஸ் போன்ற பல துறைகளை நிர்வகித்து பன்முக அனுபவத்தைப் பெற்றார்.