கடலுக்குள் மூழ்கியிருக்கும் பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகா – பக்தர்கள் தரிசிக்க அற்புத ஏற்பாடு!
நீர் மூழ்கிக் கப்பல்
ஆனால் பகவான் கிருஷ்ணர் ஆட்சி செய்த நகரம் இதுவல்ல என்றும் அந்த நகரம் கடல் கோளால் அழிந்துவிட்டது என்பது நம்பிக்கை. பெட் துவாரகா தீவுப் பகுதியின் கடலுக்கு அடியில் பகவான் கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகா நகரம் மூழ்கியிருக்கிறது என்கிறார்கள். கடலுக்குள் மூழ்கியிருக்கும் பகவான் கிருஷ்ணர் வாழ்ந்ததாகக் கருதப்படும் துவாரகா நகரம் சுமார் 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. அந்த நகரத்தை இன்றும் கடலின் ஆழத்துக்கு செல்பவர்கள் பார்க்கலாம் என்று சொல்வார்கள்.
தொல்லியல் துறை இதுகுறித்த ஆய்வுகளில் கடந்த 90 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. 1963-ம் ஆண்டு கடலுக்கு அடியில் புராதனமான சில பொருள்களைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் 1983 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைவிடப்பட்ட கட்டடத்தின் அடித்தளம், பழங்காலத் தூண்கள், நகருக்கான நீர் மேலாண்மைக் கட்டமைப்புகள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் காலம் கி.மு 3,000 முதல் 1,500 வரையிலானவை என்று கணிக்கப்பட்டுள்ளன.