1500 ஆண்டுகள் பழமையான நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்..!

நாமக்கல்லில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இந்த நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். புராண காலத்தில் இந்த ஊருக்கு ஸ்ரீசைலஷேத்ரம் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். இவை மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது இந்த கோவில்.

இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் சிலை, பீடத்தில் இருந்து 22 அடியும், பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. திறந்தவெளியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயருக்கு கோபுரம் இல்லாமல் இருப்பதற்கு காரணம், லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீ ஆஞ்சநேயர் கூறியதாகவும், அதனால் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார் என கூறப்படுகிறது.

இராமாயண காலத்தில் சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார் ஆஞ்சநேயர். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில், அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தைபெயர்த்து எடுத்து வந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்து கொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *