சிவபெருமான் படத்தை வீட்டில் தனியாக வைக்க கூடாது. ஏன் தெரியுமா?
வீட்டில் சிவன் படத்தை தனியாக வைக்க கூடாது என்றும் சிவன் பார்வதி சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை மட்டுமே வைக்க வேண்டும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
பெரும்பாலான சிவபக்தர்கள் வீட்டில் சிவன் படம் வைத்திருப்பார்கள். ஆனால் சிவபெருமாள் படத்தை தனியாக வைக்க கூடாது. தம்பதி சகீதமாக சிவனும் பார்வதியும் இருக்கும் படத்தை வைக்கவேண்டும். சிவன் படத்தை தனியாக வைத்தால் கணவன் மனைவிக்கு பிரச்சனை ஏற்படும் என்று சாஸ்திரம் கூறுவதாக தெரிகிறது.
கணவன் மனைவி ஒற்றுமையாகவும் செல்ல வளத்துடன் வாழ வேண்டும் என்றால் சிவபெருமாள் பார்வதி இணைந்த புகைப்படத்தை வைத்து வணங்கலாம். சிவனுக்கு உகந்த நாள் திங்கட்கிழமை. இதனை சோமவாரம் என்று கூறுவார்கள்
திங்கட்கிழமை சிவனுக்கு விரதம் இருப்பவர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது சிவன் படத்தை தனியாக வைக்காமல் சிவன் பார்வதி இணைந்த புகைப்படத்தை வைத்து வணங்கி அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்க என அறிவுறுத்தப்படுகிறது.