‘வாழ்க்கையின் முடிவு மரணம்’ கதறி அழுத Bigg Boss தனலட்சுமி.. ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி லட்சக்கணக்கில் ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழ் ஆடியன்ஸுக்கு பிக் பாஸ் ஒர்க் அவுட் ஆகுமா என்றே சந்தேகத்துடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். ஆனால் எதிர்பார்த்ததை விட மாபெரும் ரீச்சை கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி. முதல் சீசன் வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகியது. தற்போது 7 வது சீசன் வரை நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் தனலட்சுமி
சண்டைக்கும் சச்சரவுகளுக்கும் பஞ்சம் இல்லை என்று போகும் இந்த சீசனை விட இதற்கு முந்தைய 6வது சீசன் இந்த சண்டை சச்சரவுகளில் டாப்பில் இருந்தது. அதில் தனலட்சுமி சக போட்டியாளர்களான அசீம் மற்றும் ஜிபி முத்துவுடன் போட்ட சண்டையின் மூலமாக பேசுபொருளாக மாறினார். எந்த ஒரு சினிமா, சீரியல், மாடலிங் பின்புலமும் இல்லாமல் தனது டிக் டாக் வீடியோவால் பிரபலமான தனலட்சுமிக்கு பிக் பாசில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து உள்ளே நுழைந்தார். மொத்தம் 77 நாட்கள் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு வந்தால் கேரியர் முன்னேறும், மக்களிடம் ரீச் கிடைக்கும், இதன் மூலம் படங்களோ அல்லது சீரியல்களிலோ நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று பொதுவான எண்ணம் போட்டியாளர்கள் அனைவருக்கும் இருக்கும் . ஆனால் இது வரை பிக் பாஸ் போட்டியில் பங்கேற்று சென்றவர்களில் ஆரவ், கவின், ஹரீஷ் கல்யாண் போன்றோர் மட்டுமே படங்களில் நடித்து வருகின்றனர். பிக் பாஸ் போட்டியாளர் பெரும்பாலோனோர் வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள். அதில் தனலட்சுமியும் ஒருவர். அவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் தான் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஆகிட்டவாக இருக்கும் தனலட்சுமி ‘வாழ்க்கையின் முடிவு மரணம் என குறிப்பிட்டு மனவலியுடன் அழுவது போன்ற வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து என்ன ஆனது என்று கமெண்ட் போட தொடங்கினர். சிறிது நேரத்திலேயே அந்த கேப்ஷனை மாற்றிவிட்டார் தனலட்சுமி. இப்படி கேப்ஷன் போடும் அளவுக்கு என்ன ஆச்சு, இந்த வயசுல மரணம் குறித்த பேச என்ன தேவை என்று இணையவாசிகள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.