ஓடிக்கொண்டிருக்கும் காரில் ஆண்டாராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்ட் ஆகாதா? இது தான் உண்மையான காரணம்

இன்று விற்பனைக்கு வரும் பெரும்பாலான கார்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் இருக்கிறது. இதன் மூலம் காரின் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் நமது செல்போனை கனெக்ட் செய்ய முடியும். சில நேரங்களில் இப்படியாக கனெக்ட் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் அப்படியான நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்ற விரிவான விபரங்களை காணலாம்.

கார்களில் இன்று வழங்கப்படும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டங்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே மிகவும் பிரபலமான தேர்வுகளாக உள்ளன. இந்த இரண்டு தேர்வுகளும் உங்கள் செல்போனை காரின் இன்போடைமென்ட் சிஸ்டத்துடன் இணைக்கும் வேலையை தான் செய்கிறது. இதன் மூலம் மக்களுக்கு ஏகப்பட்ட பயன்கள் கிடைக்கிறது கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போதே பாட்டு கேட்பது உள்ளிட்ட ஏகப்பட்ட வசதிகள் இதன் மூலம் கிடைக்கிறது.

காரில் சென்று கொண்டிருக்கும் போது நீங்கள் செல்லும் இடம் குறித்த நேவிகேஷன் தகவல்களை பெற முடியும். இது மட்டுமல்லாமல் காரில் பயணிக்கும் போது உங்கள் செல்போனுக்கு வரும் அழைப்புகளை ஏற்று அவர்களுடன் பேச முடியும். அதே போல எஸ்எம்எஸ் களையும் அனுப்ப முடியும் இப்படியாக உங்கள் செல்போனிற்கு பதிலாக இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை பயன்படுத்தும் வாய்ப்பை இந்த தொழில்நுட்பம் வழங்குகிறது.

இப்படியாக ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை பயன்படுத்துபவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் கார் ஓடிக்கொண்டிருக்கும்போது ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை கனெக்ட் செய்ய முடியாது. பலர் இப்படியாக கரெக்ட் செய்வதில் மிகப்பெரிய சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

முக்கியமாக புதிதாக கார் வாங்குபவர்களுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் கார் வாங்கும் நபர்கள் நிச்சயம் இந்த தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். முதலிலேயே இந்த தகவல்களை எல்லாம் தெரிந்து கொண்டால் பின்னர் இப்படியான எந்த பிரச்சனையும் இல்லாமல் நீங்கள் பயணம் செய்ய முடியும். முதலில் ஏன் ஓடிக் கொண்டிருக்கும் காரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை கனெக்ட் செய்ய முடியாது என காணலாம்.

ஓடிக்கொண்டிருக்கும் காரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்டில் இரண்டையும் கனெக்ட் செய்ய முடியாமல் போவதற்கு காரணம் பாதுகாப்பு அம்சங்கள் தான். நீங்கள் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போது உங்கள் செல்போனை நீங்கள் கனெக்ட் செய்ய விரும்பினால் உங்களுக்கு உங்கள் கவனம் அதை கனெக்ட் செய்வதில் இருக்குமே தவிர கார் ஓட்டுவதில் இருக்காது. இதனால் கார் ஓடிக்கொண்டிருக்கும்போது இதை கனெக்ட் செய்யும் ஆப்ஷனை கார் தயாரிப்பு நிறுவனங்கள் நிறுத்தி வைத்துவிட்டன.

இதை கனெக்ட் செய்ய முற்பட்டால் கவன சிதறல் ஏற்பட்டு உங்கள் வாகனம் விபத்தில் சிக்க நேரிடும் என்பதால் இப்படியான விஷயத்தை அவர்கள் செய்துள்ளனர். சாலையில் இதன் மூலம் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காகவே இப்படியாக அதை கனெக்ட் செய்யும் ஆப்ஷனை நிறுத்தி வைத்துள்ளனர். கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. நீங்கள் எளிதாக ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் ஆகியவற்றை உங்கள் காருடன் கனெக்ட் செய்ய முடியும்.

இதை செய்ய வேண்டும் என்றால் நீங்கள் முதலில் பாதுகாப்பான இடத்தில் காரை நிறுத்த வேண்டும். காரை நிறுத்தினால் மட்டுமே ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய அம்சங்களை கனெக்ட் செய்ய முடியும். உங்களுக்காக உங்கள் காரை ஒருபுறம் நிறுத்திவிட்டு அதன் பின்னர் நீங்கள் கனெக்ட் செய்ய முயற்சி செய்தால் நிச்சயம் அது கனெக்ட் ஆகிவிடும். பலருக்கு இந்த விஷயம் தெரியாமல் மாத கணக்கில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய அம்சங்களை பயன்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள்.

இந்த அம்சம் என்பது உங்கள் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளது என பலருக்கும் தகவல் தெரியாது. ஏன் ஷோரூமில் உள்ள ஊழியர்கள் கூட இந்த தகவல்களை உங்களுக்கு சொல்லித் தர மாட்டார்கள். அவர்கள் எப்படி கனெக்ட் செய்யலாம் என்பதை மட்டும் காரை நிறுத்தி இருக்கும்போது சொல்லி தருவார்கள் கார் ஓடிக்கொண்டிருக்கும்போது இது வேலை செய்யாது என்பதை சொல்லித் தர மறந்து விடுவார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *