பணக்காரங்களே இந்த காரை வாங்க யோசிப்பாங்க! அப்படி என்ன தான் இருக்குது இந்த கார்ல!
மெக்லாரன் நிறுவனம் வரும் பத்தாம் தேதி இந்தியாவில் தனது 750எஸ் என்ற காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த கார் ஏற்கனவே இந்நிறுவனம் வெளியிட்டு வந்த 720எஸ் என்ற காரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் காராக உருவாக்கப்பட்டுள்ளது. பழைய காரை விட சிறந்த பெர்ஃபார்மென்ஸ் குறைந்த எடை மற்றும் அதிக பவர் கொண்ட காராக இது உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்த 750 எஸ் காரை பொருத்தவரை 4.0 லிட்டர் டிவின் டர்போ வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 740 பிஎச்பி பவரையும் 800 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 720 எஸ் காரை விட கூடுதலாக 30 பிஎச்பி பவர் மற்றும் 30 என்எம் டார்க் திறன் அதிகமாக வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த 750எஸ் காரைப் பொறுத்தவரை முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.8 நொடியில் பிக்கப் செய்துவிடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 0 முதல் 200 கிலோமீட்டர் வேகத்தை 7.2 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் பார்ப்பதற்கு அப்படியே 720எஸ் காரை போலவே இருக்கிறது.
புதிய 750s கார் முன்பக்கம் புதிய ஸ்பிலிட்டர்கள், ஹெட்லைட்டுகள், புதிய வீல் ஆர்ச், நீட்டிக்கப்பட்ட பின்பக்க டெக், பெரிய ரியர் விங் ஆகியவற்றை கொண்டதாக இருக்கிறது. பழைய காரிலிருந்து இந்த 750எஸ் கார் எடை குறைவான காராக உருவாக்கப்பட்டுள்ளது. 750எஸ் காரை விட சுமார் 30கிலோ இந்த காரின் எடை குறைவாகும். 720 கார் 1389கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. 750எஸ் கார் வெறும் 1277கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் பெர்ஃபார்மென்ஸை பொறுத்தவரை 720எஸ் காரின் பெர்ஃபார்மென்ஸ் போலவே கிட்டத்தட்ட இருக்கிறது. என்னதான் பவர் அதிகமாகவும் டார்க் திறன் அதிகமாகவும் இருந்தாலும் பெரிய அளவில் வித்தியாசம் தெரியாது என்றுதான் நமக்கு புரிகிறது. இந்த இரு கார்களும் பிக்கப் திறன் ஒரே அளவில் இருப்பதால் பெரிய அளவில் இதில் வித்தியாசம் இல்லை. ஆனால் சில அப்டேட்கள் மிக முக்கியமானதாக உள்ளன.
இந்த காரின் உட்புறம் 8.0 இன்ச் சென்ட்ரல் டச் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் டிரைவர் சென்ட்ரிக் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே உள்ளது. இது போக வயர்லெஸ் சார்ஜிங் வசதி இந்த காரில் இருக்கிறது. வழக்கம்போல ஆப்பிள் கார்ப்ளே ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டியும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரின் உட்புறம் நப்பா லெதர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் சவுண்ட் சிஸ்டத்தை பொருத்தவரை பவ்வர்ஸ் அண்ட் வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 750எஸ் காரில் முக்கியமாக முன் பக்கத்தை தூக்கும் தொழில்நுட்பம் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்பு முன் பக்கத்தை தூக்க எவ்வளவு நேரம் ஆகுமோ, அதைவிட பாதி நேரத்தில் தற்போது முன்பக்கத்தை முழுமையாக தூக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த 750s காரில் கண்ட்ரோல் லாஞ்சர் சிஸ்டம் இருக்கிறது. இதனால் இந்த காரை ஓட்டும் டிரைவர் இந்த காரின் இன்ஜின் திறன் மற்றும் ஹேண்டில் மோடுகளை கஸ்டமைஸ் செய்து கொள்ளலா.ம் இதில் கம்போர்ட், ஸ்போர்ட் மற்றும் டிராக் ஆகிய மோடுகள் இருக்கிறது. இந்த கார் முழுமையாக ஏரோடைனமிக் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காரின் பெர்ஃபார்மென்ஸ் சிறப்பாக இருக்கும்.
மெக்லாரன் நிறுவனம் இந்த காரை இந்தியாவிற்கு கொண்டு வருவதன் மூலம் இந்தியாவில் உள்ள மெக்லாரன் ரசிகர்கள் இந்த காரை வாங்கக்கூடும். பலர் இந்த காருக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே இந்த காரை வாங்கும் அளவுக்கு பணம் வைத்திருப்பார்கள். கண்டிப்பாக இந்த காரின் விலை கோடிகளில் இருக்கும். எவ்வளவு விலை என்ற விபரம் அறிமுகத்தின் போது தான் தெரியவரும்.