டாடாக்கு ஆப்பு வைக்க ரெடியாகும் ஃபோக்ஸ்வேகன்! புது எலெக்டரிக் கார் வரப்போகுதாம்!
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை துவங்குவதற்காக. பீக் இவி என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் இந்தியாவிலேயே முழுமையாக கட்டமைக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. 2026-ம் ஆண்டு இந்த கார்கள் எல்லாம் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இது குறித்த விரிவாக விவரங்களை காணலாம்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் சிறப்பான கால்களை விற்பனை செய்யும் இது வரும் ஒரு நிறுவனமாக இருக்கிறது. தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் மெல்ல மெல்ல தங்கள் தயாரிப்புகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை உட்பகுத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் என்பதை அறிந்து மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் வாகனங்களை பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர்.
இப்படியாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் இந்தியாவில் சிறப்பாக கார்களை விற்பனை செய்து வரும் நிலையில் இந்த நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனத்தை நோக்கி தனது பார்வையை திருப்புவதற்காக புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதன்படி பீக் இவி என இதற்கு பெயர் வைத்து ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக அந்நிறுவனம் இந்தியாவில் உள்ள மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது இந்த இரு நிறுவனங்களும் இணைந்து. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான ஃபிளாட்பார்மை ஆரம்பத்தில் இருந்தே கட்டமைக்க முடிவு செய்துள்ளன. இதற்காக ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் தற்போது சர்வதேச அளவில் உள்ள என்இபி 21 ஜி என்ற பிளாட்ஃபார்மை முழுமையாக இந்தியாவில் கட்டுமானம் செய்யும்படி உருவாக்க நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
இந்த ஃபிளாட்பார்மில் உருவாக்கப்படும் கார்கள் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகிய இரண்டு பேட்ஜ்களிலும் விற்பனைக்கு வருகிறது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக எஸ்யூவி கார் விற்பனைக்கு கொண்டுவர அந்நிறவனம் திட்டமிட்டு வருகிறது. தற்போது ஆண்டுக்கு 50,000 கார்களை தயாரிக்கும் வகையில் அந்நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கான கட்டுமானத்தை உருவாக்கும் ஃபிளாட்பார்மை தயார் செய்து வருகிறது. இப்படியாக உருவாக்கப்படும் காரணம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டு உருவாக்கி வருகிறது.
ஸ்கோடா நிறுவனம் தனது எலக்ட்ரிக் கார்களுக்கான திட்டங்களை இனிதான் வகுக்க திட்டமிட்டுள்ளது. தற்போது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் இணைந்து ஒரே கட்டுமானத்தில் வாகனங்களை தயாரிக்கும் என்ற மனநிலையில் தான் தற்போது இருக்கிறது. இந்த கார் மற்றும் டைகுன் காரை விட குறைந்த விலையில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என தனி பிராண்ட் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வாகனத்தை விற்பனை செய்து செய்ய திட்டமிட்டுள்ளது. சரியாக சொல்லப்போனால் ஒரு பிராண்ட் இல்லாமல் இரண்டு பிராண்டுகளை உருவாக்கி இரண்டு பிராண்டுகளும் ஒன்றோடு ஒன்று போட்டியிடும் வகையில் மார்க்கெட்டில் போட்டியை தனக்குத்தானே உருவாக்கிக் கொள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
கடந்த 2023 இந்தியாவில் சுமார் 2.2மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணப்பரிவத்தினையைப் பெற்று 48% லாபத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் சுமார் நிறுவனம் 5 லட்சம் கார்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது. தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால் இந்தியா எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் மிக முக்கியமான நாடாக இருக்கும் என்பதால் போக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவை எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மையமாக மாற்ற முடிவு செய்துள்ளது.
இதற்காக தான் நிறுவனம் பீக் இவி என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அதன்படி இந்தியாவிலேயே முழுமையாக கட்டமைக்கப்பட்ட கார்களை உருவாக்கும் திறனை வளர்த்து, இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு என்ற தனி பெயரை உருவாக்கி இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கான புதிய அத்தியாயத்தை துவக்கி இந்தியாவில் போக்குவரத்தை சுலபமாக்கி புரட்சி செய்ய திட்டமிட்டு வருகிறது.