மார்ச் மாசம் டெலிவரி செய்வதற்காக இப்பவே உற்பத்தி பணிகளை தொடங்கிட்டாங்க! இத்தாலியில் டிசைன் செய்யப்பட்ட பைக்!

உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான அப்ரில்லா (Aprilia), இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா பைக் வீக் 2023 (India Bike Week 2023) நிகழ்வின் வாயிலாக அதன் புதுமுக மோட்டார்சைக்கிள் மாடலை வெளியீடு செய்தது. அப்ரில்லா ஆர்எஸ் 457 (Aprilia RS 457) பைக்கையே அLு அறிமுகப்படுத்தியது.

இந்த பைக்கை அது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கும் கொண்டு வந்துவிட்டது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 4 லட்சத்து 10 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். வெகு விரைவில் இந்த பைக்கின் டெலிவரி பணிகளையும் அப்ரில்லா நிறுவனம் தொடங்க இருக்கின்றது.

இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி அப்ரில்லா ஆர்எஸ் 457 பைக்கின் டெலிவரி பணிகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே பைக் புக்கிங் செய்தவர்களுக்கு டெலிவரிக் கொடுக்க ஏதுவாக அப்ரில்லா நிறுவனம் ஆர்எஸ் 457 மாடல் பைக்கின் பைக்கின் உற்பத்தி பணிகளை நாட்டில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த மோட்டார்சைக்கிளை முழுக்க முழுக்க இத்தாலியில் வைத்தே அப்ரில்லா நிறுவனம் டிசைன் மற்றும் வடிவமைப்பைச் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதன் உற்பத்தி பணிகள் தற்போது இந்தியாவின் பரமதி பிளானட்டிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கு வைத்து உற்பத்தி செய்யப்பட்ட ஆர்எஸ் 457 பைக்குகளின் படங்களே தற்போது வெளியாகி இருக்கின்றது.

இந்த படமே தற்போது அப்ரில்லா பைக் பிரியர்கள் மத்தியில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றது. மேலும், ஆர்எஸ் 457 பைக்கை புக் செய்துவிட்டுக் கைகளில் பெற காத்துக் கொண்டிருப்பவர்களை இந்த தகவல் பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. அப்ரில்லா ஆர்எஸ் 457 பைக் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் பல்வேறு மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறங்கி இருக்கின்றது.

அந்தவகையில், கவாஸாகி நிஞ்சா 400, கேடிஎம் ஆர்சி 390 மற்றும் யமஹா ஆர்3 ஆகியவற்றிற்கே இதன் வருகை போட்டியாக அமைந்திருக்கின்றது. மிக முக்கியமாக இதன் வருகை கேடிஎம் ஆர்சி 390-க்கே பேரிடியாக அமைந்திருக்கின்றது. அப்ரில்லா நிறுவனம் மிகவும் ஸ்டைலான பைக்காக அப்ரில்லா 457-ஐ தயார் செய்திருக்கின்றது.

இதன் அடிப்படையில் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த பைக்கில் அது சேர்த்து இருக்கின்றது. ஆகையால், உயர்தர மோட்டார்சைக்கிளை போல் அது காட்சியளிக்கின்றது. வெளிப்புற பார்வைக்கு மட்டுமல்ல உண்மையிலேயே இது ஓர் உயர்தர மோட்டார்சைக்கிள்தான். இதற்கு சான்றாக அதில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் இருக்கின்றன.

அப்ரில்லா பைக்கில் மிகவும் அழகிய தோற்றம் கொண்ட பகல் நேரத்தில் ஒளிரக் கூடிய எல்இடி லைட்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது ஹெட்லைட்டிற்கு கீழ் பகுதியில் மீசையைப் போல் இருக்கும். இதுதவிர, பிரமாண்ட ஸ்போர்ட் லுக் கொண்ட முன் பக்க மாஸ்க், அதில், விண்ட் ஷீல்டு மற்றும் மெல்லிய இன்டிகேட்டர்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இவை அனைத்தும் சேர்ந்து அப்ரில்லா ஆர்எஸ் 457-க்கு அட்டகாசமான ஸ்போர்ட்டி லுக்கை வழங்கி இருக்கின்றன. இதற்கு மேலும் மெருகேற்றும் வகையிலேயே பைக்கின் இருக்கை மற்ரும் சைடு பாடி பேனல்கள் அமைந்திருக்கின்றன. எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 457 சிசி, லிக்யூடு கூல்டு, டிஓஎச்சி, பாரல்லல் ட்வின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 46 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. பைக்கின் உருவாக்கத்தில் ட்வின்-ஸ்பேர் அலுமினியம் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், மிக சிறந்த இயக்க அனுபவத்திற்காக அப்சைடு டவுன் ஃபோர்க் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் மோனோ ஷாக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

மேலும், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்கம் மற்றும் பின் பக்கம் என இரண்டிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுடன், இந்த பைக்கில் கூடுதல் பிரீமியம் அம்சமாக 5 அங்குல டிஎஃப்டி திரை, மூன்று லெவல் டிராக்சன் கன்ட்ரோல், மூன்று விதமான ரைடிங் மோட்கள், ரைடு-பை-ஒயர் த்ரோட்டில் மற்றும் எல்இடி லைட்டுகள் ஆகியவையே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *