சோம்பல் முதல் புற்றுநோய் வரை…. அலற வைக்கும் வைட்டமின் டி குறைபாடு!!
இந்தக் கேள்விகளுக்கான பதில் ஆம் என்றால், கவனமாக இருங்கள்!! இந்த அறிகுறிகள் உங்கள் உடலில் வைட்டமின் டி குறைபாடு இருப்பதைக் குறிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் மூடுபனி, ஏனெனில் மூடுபனி காரணமாக மக்களுக்கு சூரிய ஒளி கிடைப்பதில்லை. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உடலில் உள்ள வைட்டமின் டி குறைபாட்டை சில எளிய வழிகளில் பூர்த்தி செய்யலாம்.
வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உண்ணுங்கள் (Foods For Vitamin D Deficiency)
நீங்கள் சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி (Vitamin D) பெற முடியாவிட்டால், அதன் குறைபாட்டை உணவில் ஈடுசெய்ய வேண்டும். முட்டை, ஆரஞ்சு, தயிர், காளான் மற்றும் பசும்பால் போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை நீங்கள் சாப்பிடலாம்.
வைட்டமின் டி குறைபாட்டின் தீமைகள்
வைட்டமின் டி உடலுக்கு மிகவும் முக்கியமானது. கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பேட் போன்ற பிற முக்கிய தாதுக்களுடன் வைட்டமின் டி உங்கள் எலும்புகளை பலப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வைட்டமின் டி குறைபாடு (Vitamin D Deficiency) எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் குறைபாடு ஹார்மோன்களையும் பாதிக்கிறது. இதனால் மனநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. தூக்கத்தின் அளவு குறைகிறது. ஒட்டுமொத்தமாக, வைட்டமின் டி குறைபாடு உங்கள் ஆரோக்கியமான உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.
வைட்டமின் டி குறைபாடு
வைட்டமின் டி குறைபாடு நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பது மட்டுமின்றி, எலும்புகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வைட்டமின்னின் குறைபாட்டால், எலும்புகள் பலவீனமடைய ஆரம்பித்து, எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதனால் சோம்பல், சோர்வு, எரிச்சல் போன்றவை ஏற்படும் . வைட்டம்கின் டி குறைபாடு இருந்தால், அது நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்மறையாக பாதிக்கிறது. சில முக்கிய விசேஷங்களில் கவனம் செலுத்தினால் வைட்டமின் டி குறைபாட்டால் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். வைட்டமின் டி பல உடல் செயல்பாடுகளைச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது