பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் ‘இந்த’ விஷயத்தில கவனமா இருந்தா, நோய்கள் ‘அன்பிரண்ட்’ ஆயிடும்
ஆனால், தினந்தோறும் இருமுறை பற்களை துலக்குவதால் மட்டுமே, பற்கள் என்றென்றும் ஆரோக்கியமாக இருந்துவிடும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், பற்களை ஆரோக்கியமாக பாதுகாக்காவிட்டால், பல்வேறு நோய்கள் நம்மைபாதிக்கும். பற்களை பாதுகாப்பதில் வைட்டமின்களின் பங்கு மிக அதிகமான ஒன்று.
பற்கள் ஆரோக்கியமாக இருக்கவும், எனாமலை (Enamel) தகவமைத்துக் கொள்ளவும் ஊட்டச்சத்துகள் அவசியம். போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்காவிட்டால் பற்களின் ஆரோக்கியம் கெடுவது மட்டுமல்ல, பல்வேறு நோய்களும் நமது உடலை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பற்களின் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சர்க்கரை மட்டுமல்ல. போதுமான அளவில் ஊட்டச்சத்துகள் கிடைக்காததும் தான் என்பது பலருக்குத் தெரிவதில்லை. பற்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், எந்தெந்த நோய்கள் உங்களை பாதிக்கும் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.
நீரிழிவு நோயாளிகள் பற்களை முறையாக பராமரிக்காவிட்டால், பல்லில் இருந்து தொற்று தாடை எலும்புக்கு பரவும். அதிலும் அதிக சீழ் இருந்ததால் சுவாசப் பிரச்சனைகளும் ஏற்படும்.
டிமென்ஷியா ஆபத்து
மோசமான வாய் ஆரோக்கியம் மூளையை பாதிக்கும். வீக்கமடைந்த ஈறுகளில் இருந்து வெளியாகும் பொருட்கள் மூளை செல்களைக் கொன்று நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுக்கும். டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்களும், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் நரம்பு வழிகளில் பரவும் போது அல்லது இரத்த ஓட்டத்தில் நுழையும் போது ஈறு அழற்சியின் விளைவாகவும் ஏற்படலாம்.
கார்டியோவாஸ்குலர் ஆபத்து
மோசமான வாய் ஆரோக்கியம், வாயிலுள்ள பாக்டீரியாக்களை இரத்த ஓட்டத்தின் மூலம் தமனிகளுக்குக் கொண்டு செல்லும். இதனால் இரத்த ஓட்டத்தில் பிரச்சினைகள் மற்றும் இதய அடைப்புகள் ஏற்படலாம். தமனிகள் மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் சேதம் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
சிறுநீரக நோய்
நாள்பட்ட சிறுநீரக நோய், சிறுநீரகம், இதயம், எலும்புகள் மற்றும் இரத்த அழுத்தத்தை பாதிக்கும் ஒரு தீவிர உடல்நலப் பிரச்சனையாகும். பெரிடோன்டல் நோய் போன்ற உடலில் ஏற்படும் தொற்றுகள் சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும். ஈறு நோய் உள்ளவர்கள் பொதுவாக பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளனர். சிறுநீரக செயலிழப்பு அல்லது இருதய நோய்க்கு வழிவகுத்தால் சிறுநீரக நோய் ஆபத்தானது.
ஆரோக்கியமான பல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள்
ஆரோக்கியமான பற்களை பெற முக்கியமான நான்கு வைட்டமின்கள் அவசியம், அந்த வைட்டமின்கள் அடங்கியுள்ள சில முக்கிய உணவுப் பொருட்களின் பட்டியல்.
வைட்டமின் ஏ சத்துக்களைக் கொண்ட ஈரல், மீன், பால் மற்றும் முட்டைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி சத்து, மீன், காளான், பால் போன்ற பொருட்களிலும்,சூரிய ஒளியிலும் இருக்கிறது.