ரூ.540 கோடியில் நவீன திரைப்பட நகரம்.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நூற்றாண்டு விழாவை தமிழ்த்திரையுலகம் விழாவாக எடுத்துள்ளது.

 

இதனையொட்டி, சென்னையில் நேற்று ( டிச. 6) பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின் ஜனவரி 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதே போல் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருந்த நிகழ்ச்சி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, வடிவேல், கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன், கன்னட ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் நடிகை நயன்தாரா, உள்ளிட்ட ர் பல திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.

சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், “2018 ஆம் ஆண்டு கருணாநிதி மறைவு தமிழ்நாட்டை கலங்க வைத்தது. அவர் வாழ்ந்த காலத்தை போல மறைந்த பின்னரும் நினைத்து பெருமைப்பட கூடியவர். ராஜகுமாரி முதல் பொன்னர் சங்கர் படம் வரை அவரது சினிமா பயணம் மிகப்பெரியது. அவர் ஒரு படத்திற்கு வசனம் எழுதினாலே அந்த படம் வெற்றி தான். கலை என்றுமே என்னிடம் என்று வாழ்ந்தவர்.

அவர் திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் கலைத்துறையினருக்கு பல்வேறு திட்டங்கள் செய்து இருக்கிறார். அது இந்த ஆட்சியிலும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த விழா மேடையில் நான் சில திட்டங்களை அறிவிக்கிறேன். கமல் ஹாசன் வைத்த கோரிக்கை அடிப்படையில் பூந்தமல்லியில் ரூ.540 கோடி செலவில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது.

இதில் வி,எஃப்.எக்ஸ், அனிமேஷன், புரொடக்‌ஷன் பணிகள், 5 ஸ்டார் ஹோட்டல் என சகல வசதிகளும் செய்யப்படுகிறது. அதே போல் ரூ.25 கோடி மதிப்பில் 4 படப்பிடிப்பு தளங்களுடன் எம்ஜிஆர் திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது ” என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *