Sarika – கமல் பிரிந்து போனதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.. எனக்கு அவங்க இருக்காங்க.. சரிகா ஓபன் டாக்

சென்னை: கமல் ஹாசன் முதலில் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார். அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற அவர் அடுத்ததாக சரிகாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்தத் தம்பதிக்கு பிறந்தவர்கள்தான் ஸ்ருதி ஹாசனும், அக்‌ஷரா ஹாசனும். இந்த சூழலில் கமலுடனான பிரிவு குறித்து சரிகா பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

இந்திய திரையுலகின் அடையாளமாக இருப்பவர் கமல் ஹாசன். சிறு வயதிலிருந்தே சினிமாவில் இருக்கும் அவர் சினிமாவின் பல துறைகளில் கில்லி. நடனம், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடல்கள் எழுதுவது, பாடல்கள் பாடுவது என அனைத்து வித்தைகளையும் தெரிந்து வைத்திருக்கும் வெகு சிலரில் ஒருவர். அதனாலேயே அவரை சினிமாவின் பல்கலைக்கழகம் என்று அழைப்பார்கள். முக்கியமாக சாமானியர்கள் மட்டுமின்றி திரையுலகில் இருப்பவர்களும் கமல் ஹாசனுக்கு வெறித்தனமான ரசிகர்களாக இருப்பார்கள்.

செம இயக்குநர்: நடிகராக பல படங்களில் தனது முத்திரையை ஆழ பதித்திருக்கும் கமல் ஹாசன் இயக்கத்திலும் தனித்த அடையாளத்தை கொண்டிருப்பவர். ஒரு கதைக்கு இரண்டு கோணங்கள் இருக்கும் என்ற விஷயத்தை பலரும் மறந்திருந்த சூழலில் அதை வைத்து விருமாண்டி படத்தை இயக்கி அதகளம் செய்தார். அதேபோல் ஹேராம் படமும் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் நடிப்பு: தொடர்ந்து சினிமாவில் தீவிரமாக இயங்கிவந்த கமல் ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியதால் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தார். பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தின் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது. இதனால் உற்சாகமடைந்த அவர் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கிறார். அந்தவகையில் இந்தியன் 2 விரைவில் வெளியாகிறது. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். மேலும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மறைக்காதவர்: கமல் ஹாசன் தனது திருமண வாழ்க்கையை யாரிடமும் மறைக்காதவர். அவர் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அதனையடுத்து நடிகை ரேகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு ஸ்ருதியும், அக்‌ஷராவும் பிறந்தார்கள். ஆனால் கமல் ரேகாவையும் விவாகரத்து செய்தார். அவரைத் தொடர்ந்து கௌதமியுடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். இதற்கிடையே நடிகை ஸ்ரீவித்யாவையும் காதலித்தார். ஆனால் அவர்களது காதல் கைகூடவில்லை. இதையெல்லாம் வைத்து அவரை கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. ஆனால் கமல் ஹாசன் அதை கண்டுகொள்வதில்லை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *