16 வயது ஸ்ரீதேவியை பெண் கேட்க சென்ற ரஜினி! சர்ச்சையில் சிக்கிய சூப்பர் ஸ்டார்!
இவர், ப்ளாக் அண்ட் வைட் படங்களில் அதிகம் ஜோடி போட்டு நடித்தது, ஸ்ரீதேவியுடன்தான். இவருக்கும் ஸ்ரீதேவிக்கும் திரைக்கு முன்னால் மட்டுமன்றி, திரைக்கு பின்னாலும் நல்ல உறவு இருந்துள்ளது. ஆனால் அந்த உறவு காதல் உறவா? அல்லது வெறும் நட்புதானா? இங்கு பார்க்கலாம்.
ரஜினி-ஸ்ரீதேவி ஒன்றாக சேர்ந்து நடித்த படங்கள்..
1976ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு 25 வயது சித்தியாக நடித்திருப்பார், ஸ்ரீதேவி. அப்போது அவருக்கு வயது 13தான். இந்த படத்தில் ஆரம்பித்த இவர்களின் பந்தம் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவருமே அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, நான் ஜானி, வணக்கத்துக்குரிய காதலியே என மொத்தம் 4 மொழிகளில் 22 படங்களில் சேர்ந்து நடித்தனர். அண்ணன்-தங்கையாக ஒரே ஒரு படத்தில் மட்டும் சேர்ந்து நடித்துள்ளனர். அப்போது திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக இருந்த கமலும் ரஜினியும் தங்களது ஆசிரியரும் இயக்குநருமான கே.பாலச்சந்தர் மற்றும் ஸ்ரீதேவியுடனும் நல்ல பந்தத்துடன் இருந்தனர்.
ஸ்ரீதேவியை காதலித்த ரஜினி..?
நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீதேவியுடன் பல படங்களில் ஒன்றாக நடிப்பதற்கு முன்னாள் இருந்தே, அவரது குடும்பத்தினருக்கும் குறிப்பாக ஸ்ரீதேவியின் தாயாருடன் நெருங்கிய நட்புடன் பழகினார். ஸ்ரீதேவி, ரஜினியை விட 13 வயது இளையவர். இதனாலேயே, ரஜினி அவர் மீது மிகுந்த பாதுகாப்பு உணர்வோடு இருந்ததாக கூறப்படுகிறது. ஒன்றாக பல படங்களில் ஒன்றாக நடித்திருந்தாலும் இவர்களுக்குள் காதல் என்ற ஒன்று இருந்ததாக எந்த தடையமும் இல்லை. ஸ்ரீதேவி, ரஜினியை காதலித்தாரா என்பதற்கான தகவலும் இல்லை. ஆனால், ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை காதலித்ததாக இயக்குநர் கே.பாலச்சந்தர் ஒரு பத்திரிக்கை பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.