வந்தாச்சு புதிய கொள்கை.. சர்வதேச முதலீட்டாளர்கள் முன்பு நடந்த சம்பவம்.. இதுதான் பிளானா..?

மிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசு சர்வதேச முதலீட்டாளர்கள் முன்னிலையில் தமிழக அரசு செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் கொள்கையை வெளியிட்ட உள்ளது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறைக்கு மிகவும் முக்கியமானதாகச் செமிகண்டக்டர் துறை உள்ளது. இந்தியாவில் செமிகண்டக்டர் துறையில் இப்போது தான் அடியெடுத்து வைத்துள்ளது, சிலிக்கான் ஃபேரிகேஷன், செமிகண்டக்டர் OSAT, சிப் டிசைனிங் எனப் பல துறையில் வாய்ப்புகள் இருக்கும் வேளையில், இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் வகையில் தமிழக அரசு செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் கொள்கையை வெளியிட்டு பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு இந்தச் செமிகண்டக்டர் கொள்கையை முன்பே வெளியிட்டு இருக்கலாம், ஆனால் 30 நாடுகளின் சர்வதேச முதலீட்டாளர்களை நேரடியாகச் சந்திக்கும் வேளையில் இக்கொள்கையை வெளியிடுவதன் மூலம் சிறப்பான பார்வையைப் பெறும். இந்த 30 நாடுகள் அல்லது அந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்யத் திட்டமிட்டால் கட்டாயம் தமிழ்நாடு ஆப்ஷனாக இருக்க இந்தக் கூட்டத்தில் வெளியிடப்பட்டு உள்ள செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் கொள்கை பயன்படும். இது செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பெரிய ஈர்ப்பு சக்தியாக இன்று வெளியிட்டுள்ள செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் கொள்கை விளங்கும். இதில் முக்கியமான அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த நிறுவனங்கள் விரைவாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இக்கூட்டத்தில் செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் கொள்கை வெளியிட்ட இதேவேளையில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் பாதை என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இவ்விரு அறிக்கையும் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் மத்திய தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இணைந்து வெளியிட்டனர்.தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்று துவங்கி நாளை வரையில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டத்தின் முக்கிய இலக்கே வளர்ச்சி வாய்ப்புகளைச் சென்னை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் மட்டுமே கட்டுப்படுத்திக் கொண்டு செல்வது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சியை விநியோகிக்கப்பட வேண்டும் என்பது தான்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *