உடல்நிலை சரியில்லை எனில் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப வேண்டாம்..!

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் மட்டும் பாதிப்புகள் 700ஐ நெருங்கி கொண்டிருக்கிறது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

அந்த வகையில் பெங்களூருவில் உள்ள அனைத்து பள்ளிகளும் பொதுவான அறிவுறுத்தலை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, உடல்நிலை சரியில்லை எனில் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல், மூக்கில் ஒழுகுதல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் பத்திரமாக வீட்டிலேயே வைத்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன.

இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், வாய், மூக்கு ஆகியவற்றை மூடியிருக்கும் வகையில் முகக்கவசம் அணிய வேண்டும். இந்த விஷயத்தில் வீட்டிலேயே மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்திருக்கும் போது அதன் முன்பகுதியை கைகளால் தொடக்கூடாது. பக்கவாட்டில் இருக்கும் எலாஸ்டிக் பேண்ட்களை மட்டுமே தொடலாம். தங்களது முகக்கவசங்களை நண்பர்களுடன் பரிமாறிக் கொள்ளக் கூடாது.

இரவில் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். சத்தான மற்றும் சரிவிகித உணவை சாப்பிட வேண்டும். போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். இதுதவிர போதிய உடல் ரீதியான செயல்பாடுகளும் அவசியம். இவ்வாறு செய்தால் தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் சானிடைசர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *