ராஜஸ்தானில் நாளை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கரண்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் மரணமடைந்ததைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.
இத்தொகுதிக்கான தேர்தல், ஜன., 5-ல் நடந்தது. இணை அமைச்சராக, கடந்த மாதம், 30-ம் தேதி பதவியேற்ற சுரேந்தர் பால் சிங், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான அமைச்சரவையில், பா.ஜ.க., வேட்பாளராக போட்டியிட்டார்.
காங்கிரஸ் தரப்பில் குர்மீத் சிங்கின் மகன் ரூபிந்தர் சிங் நிறுத்தப்பட்டார்.
இங்கு 81.38 சதவீத வாக்குகள் பதிவாகின.அங்கு நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.