வெற்றி பெறுமா தமிழ் தலைவாஸ்? புனேரி பல்டனுடன் இன்று மோதல்

Pro Kabaddi League | Tamil Thalaivas: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மும்பையில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் புனேரி பல்டன் – தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *